ADDED : அக் 11, 2025 05:09 AM

பெங்களூரு: பெங்களூரில் நேற்று முன்தினம் இரவு முழுதும் கன மழை கொட்டித்தீர்த்தது.
தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் உயர் காற் றழுத்தம் காரணமாக பெங்களூரில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் மழை பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுதும் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.
சிவாஜிநகர், மாகடி ரோடு, ராஜாஜிநகர், சாம்ராஜ்பேட், விஜயநகர், மாரத்தஹள்ளி, ஹெச்.ஏ.எல்., காடுகோடி உட்பட நகரின் பெரும்பாலான பகுதிகளில், இரவு முழுதும் விடாமல் மழை பெய்து கொண்டே இருந்தது.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணியில் இருந்து நேற்று காலை 8:30 மணி வரை, அதிகபட்சமாக பொம்மனஹள்ளியில் 4.1 செ.மீ., மழை பதிவாகி இருந்தது. ஹகதுாரில் 3.4 செ.மீ., ஹெச்.எஸ்.ஆர்., லே அவுட்டில் 3.35 செ.மீ., ஹெச்.ஏ.எல்., ஏர்போட் பகுதியில் 3 செ.மீ., கருடாச்சார்பாளையாவில் 2.85 செ.மீ., பி.டி.எம்., லே அவுட்டில் 1 செ .மீ., மழை பதிவானது.
தொடர் மழையால் ஜெயநகர் 4வது பிளாக், 27வது கிராஸ் ரோட்டில் மரம் முறிந்து, கார் மீது விழுந்தது. கார் முற்றிலும் சேதம் அடைந்தது. காருக்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் எதுவும் இல்லை .
மேலும் நகரி ன் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். நேற்று காலை வெயில் அடித்த நிலையில், இரவில் மீண்டும் மழை பெய்தது.