/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் விடிய, விடிய பெய்த மழை எல்லம்மா கோவில் கருவறையில் தண்ணீர்
/
பெங்களூரில் விடிய, விடிய பெய்த மழை எல்லம்மா கோவில் கருவறையில் தண்ணீர்
பெங்களூரில் விடிய, விடிய பெய்த மழை எல்லம்மா கோவில் கருவறையில் தண்ணீர்
பெங்களூரில் விடிய, விடிய பெய்த மழை எல்லம்மா கோவில் கருவறையில் தண்ணீர்
ADDED : ஆக 11, 2025 04:50 AM

பெங்களூரு: பெங்களூரில் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. பெலகாவி சவுந்தட்டி எல்லம்மா கோவில் கருவறைக்குள் புகுந்த மழைநீர், அம்மன் கழுத்து வரை தேங்கி நின்றது.
வட கர்நாடக உள் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால், கர்நாடகாவின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்கு பல சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.
சவுந்தட்டி நகரில் நேற்று இரண்டாவது நாளாக பெய்த கனமழையால், நகரில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சவுந்தட்டியில் உள்ள புகழ்பெற்ற எல்லம்மா கோவில் மலைப்பகுதியில் நேற்று காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. நேற்றும் பெய்த கனமழையால் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கருவறைக்குள் மழைநீர் புகுந்தது. எல்லம்மா விக்ரஹத்தின் கழுத்து வரை தண்ணீர் தேங்கி உள்ளது.
பெங்களூரிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் 2:00 மணிக்கு பெய்த ஆரம்பித்த மழை இரவு முழுதும் விடாமல் பெய்தது.
லால்பாக், சாந்திநகர், ஜெயநகர், ஜே.பி.நகர், மெஜஸ்டிக், சிட்டி மார்க்கெட், சதாசிவநகர், ஹெப்பால், சாந்திநகர், சிவாஜிநகர், பனசங்கரி, கோரமங்களா, பாகல்குண்டே, விதான் சவுதா, வின்சன் மேனர், மேக்ரி சதுக்கம், ராமமூர்த்திநகர், ஹென்னுார், வட்டரபாளையா, தனிசந்திரா, நாகவாரா, பாகலுார் உள்ளிட்ட பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
பஸ் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், ரயில்வே சுரங்க பாதை பகுதிகளில் பலர் மழைக்கு ஒதுங்கி நின்றனர். சாலையில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால், பல கி.மீ., துாரத்திற்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அடுத்த 7 நாட்களுக்கு பெங்களூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

