/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
/
கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்
ADDED : ஏப் 07, 2025 08:04 AM
பெங்களூரு : கடலோர மாவட்டங்களில், இன்று இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், நாளை (இன்று) இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக உடுப்பி, தட்சிணகன்னடா போன்ற, கடலோர மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும். மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்லாமல் இருப்பது நல்லது.
பெலகாவி, தார்வாட், கதக், ஹாவேரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகின்றன. சிக்கமகளூரு, ஹாசன், குடகு, சாம்ராஜ்நகர், மைசூரு, ஷிவமொக்கா மாவட்டங்களில், சாதாரண மழை பெய்யும்.
பெங்களூரில் மேகமூட்டமான வானிலை நிலவுகிறது. எனவே இங்கும் மழைக்கு வாய்ப்புள்ளது. விஜயநகரா, கொப்பால், ஹாவேரி மாவட்டங்களிலும், லேசான மழை பெய்யும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.