தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் திடீர் கனமழை

பெங்களூரில் திடீர் கனமழை

பெங்களூரில் திடீர் கனமழை


UPDATED : அக் 06, 2026 03:38 AM

ADDED : அக் 05, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 03:38 AM ADDED : அக் 05, 2026 11:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் நேற்று மழை பெய்த திடீர் கனமழையால், சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், நேற்று மாலை 4:00 மணிக்கு மேல் திடீரென மழை பெய்தது.

சிவாஜிநகர், காக்ஸ் டவுன், இந்திராநகர், ஹெச்.ஏ.எல்., ஹென்னுார் உட்பட நகரின், பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.

மெஜஸ்டிக் பகுதியில் உள்ள, ரயில்வே சுரங்கபாதையில் தண்ணீர் தேங்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள், வாகனங்களை ஓட்டி சென்றனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கிடைக்கும் இடங்களில் ஒதுங்கி நின்றனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்த மழை, இரவில் நீடித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us