தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மைசூரு தசராவில் தனியார் தர்பார் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு

மைசூரு தசராவில் தனியார் தர்பார் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு

மைசூரு தசராவில் தனியார் தர்பார் தங்க சிம்மாசனம் ஜோடிப்பு


UPDATED : அக் 06, 2026 03:38 AM

ADDED : அக் 06, 2026 12:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 03:38 AM ADDED : அக் 06, 2026 12:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டுள்ளது.

மன்னர் காலத்தில் இருந்தே, மைசூரில் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. மன்னர் காலத்தில் நடந்த பொது தர்பார் நிகழ்ச்சியில், தங்கம், வெள்ளி, வைரம், நவரத்தினங்களால் ஆன சிம்மாசனத்தில் மன்னர்கள் அமர்ந்து, பொதுமக்களிடம் குறைகள் கேட்பர்.

நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்து, கர்நாடகா தனி மாநிலமாக உருவான பின், சிம்மாசனம் அரசு சொத்தாக மாறியது. மைசூரு அரண்மனையின் கடைசி மன்னர் ஜெய சாமராஜா உடையார் காலத்தில், சிம்மாசனம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

9 பாகங்கள்



அந்த சிம்மாசனத்தை ஒன்பது பாகங்களாக பிரித்து, மைசூரு அரண்மனையின் ஒரு அறையில் வைத்து, அரண்மனை நிர்வாக அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தசரா நடக்கும் போது, சிம்மாசனத்தின் பாகங்கள் வெளியே எடுக்கப்பட்டு ஜோடிக்கப்படும்.

அரண்மனையில் உள்ள அம்பா விலாஸ் தர்பார் ஹாலில், இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவார். இதில் மன்னர் குடும்பத்தினர், முக்கிய மதகுருக்கள், அரண்மனை அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்வர்.

இந்த ஆண்டு தசராவை முன்னிட்டு, நேற்று சிம்மாசனம் ஜோடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. காலை 7:00 மணியில் இருந்து காலை 10:00 மணி வரை அம்பா விலாஸ் தர்பார் ஹாலில் சண்டி ஹோமம்; கணபதி ஹோமம்; சாமுண்டீஸ்வரி பூஜை; நவக்கிரஹ பூஜைகள் நடத்தப்பட்டன.

பட்டத்து யானை



அதன்பின் சிம்மாசனத்தை ஜோடிக்கும் பணி தொடங்கியது. அரண்மனையின் மகாராணி பிரமோதா தேவி; இளவரசர் யதுவீர்; மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, போலீஸ் கமிஷனர் சீமா லட்கர், அரண்மனை நிர்வாக அதிகாரி சுப்பிர மணியன் உள்ளிட்ட அதிகாரிகள், கண்காணிப்பில் சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டது. மதியம் 1:15 மணிக்கு சிம்மாசனம் ஜோடித்து முடிக்கப்பட்டது.

மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணா கெஜ்ஜஹள்ளி கிராமத்தின் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர், சிம்மாசனத்தை ஜோடித்தனர். அதன்பின், சிம்மாசனம் துணியால் மூடி வைக்கப்பட்டது.

பின், யதுவீர் தலைமையில் பட்டத்து யானை, குதிரைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

வரும் 11ம் தேதி சிம்மாசனத்திற்கு, யதுவீர் சிறப்பு பூஜை செய்வார். அதன்பின் காலை 10:00 மணி முதல் காலை 10:30 வரை; மாலை 5:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை சிம்மாசனத்தில் அமர்ந்து, தனியார் தர்பார் நடத்துவார்.

இதுபோல 21ம் தேதி வரை தினமும், சிம்மாசனத்தில் அமர்ந்து தனியார் தர்பார் நடத்தவுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us