/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உத்தர கன்னடாவில் கொட்டி தீர்த்த கனமழை; அதிகபட்சமாக பட்கலில் 12.28 செ.மீ., பதிவு
/
உத்தர கன்னடாவில் கொட்டி தீர்த்த கனமழை; அதிகபட்சமாக பட்கலில் 12.28 செ.மீ., பதிவு
உத்தர கன்னடாவில் கொட்டி தீர்த்த கனமழை; அதிகபட்சமாக பட்கலில் 12.28 செ.மீ., பதிவு
உத்தர கன்னடாவில் கொட்டி தீர்த்த கனமழை; அதிகபட்சமாக பட்கலில் 12.28 செ.மீ., பதிவு
ADDED : ஜூலை 23, 2025 07:53 AM

கார்வார் : உத்தர கன்னடா மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக பட்கலில் 12.28 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
வங்காள விரிகுடா பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால், கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடா, உடுப்பியில் நேற்று காலையில் இருந்தே மழை பெய்தது.
உத்தர கன்னடாவில் உள்ள கார்வார், அங்கோலா, குமட்டா, சிர்சி, எல்லாபுரா, சித்தாபுரா, ஹொன்னாவர் உள்ளிட்ட தாலுகாக்களில் மழை வெளுத்து வாங்கியது. உடுப்பியில் குந்தாபுரா, பைந்துார், கார்கலா தாலுகாக்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
அதிகபட்சமாக உத்தர கன்னடாவின் பட்கல்லில் 12.28 செ.மீ., முண்டள்ளியில் 11.60 செ.மீ., குமட்டாவில் 11.35 செ.மீ., உடுப்பியின் கெர்கல், உத்தர கன்னடாவின் ஜலியில் தலா 11.5 செ.மீ., மழை பெய்தது. தட்சிண கன்னடாவில் மங்களூரில் பெய்த கனமழையால், நகரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியது. வாகனங்கள் சிரமப்பட்டு இயக்கப்பட்டன.
பெங்களூரிலும் நேற்று சிவாஜிநகர், ராஜாஜிநகர், வசந்த்நகர், ஜெயமஹால் சாலை, கொட்டிகெரே, பி.டி.எம்., லே - அவுட், கெங்கேரி, விஜயநகர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கெங்கேரி, மடிவாளா உள்ளிட்ட பகுதிகளில், சாலையில் மரங்கள் விழுந்தன. கெங்கேரியில் மரம் விழுந்ததில் ஒரு ஆட்டோ சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பினார்.
கடந்த சில தினங்களாக, பெங்களூரு ரூரல் ஆனேக்கல் பகுதியில் பெய்த மழைக்கு, ஹென்நகர் ஏரி நிரம்பியது. நேற்று ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறி, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ராம்நகரின் ஹரோஹள்ளி டவுன் ஹனுமந்தநகரில் மழைக்கு வீடு இடிந்து விழுந்து, கெம்பம்மா, 80, என்பவர் இறந்தார்.
உத்தர கன்னடாவின் மழையால் பாதிக்கப்பட்ட பகுதியில், வருவாய் அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நேற்று ஆய்வு செய்தார். பின், “கடலோர மாவட்டங்களில் கடல் அரிப்பை தடுக்க 300 கோடி ரூபாயும், நிலச்சரிவை தடுக்க 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்,” என, அறிவித்தார்.