/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குகையில் வசித்த பெண் ரஷ்யா செல்ல ஐகோர்ட் அனுமதி
/
குகையில் வசித்த பெண் ரஷ்யா செல்ல ஐகோர்ட் அனுமதி
ADDED : செப் 27, 2025 05:04 AM

பெங்களூரு: கோகர்ணாவில் குகையில் இருந்த ரஷ்ய பெண்ணையும், அவரது பிள்ளைகளையும் அவர்களின் சொந்த நாட்டுக்குச் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தர கன்னட மாவட்டத்தின், கோகர்ணா கடற்கரையின், ராமதீர்த்தா அருகில் உள்ள மலைப்பகுதியில், நடப்பாண்டு ஜூலை 12ம் தேதி அதிகாலையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது மலையின் ஒரு பகுதியில் துணிகள் உலர்த்தப்பட்டிருந்தன. சந்தேகம் ஏற்பட்டு போலீசார், அங்கு சென்று பார்த்தனர். அங்கு குகை இருந்தது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும், அங்கு நின்றிருந்த சிறுமி, பயந்து, உள்ளே ஓடினார்.
யாருமே இல்லாத அடர்ந்த வனப்பகுதியில், சிறுமியை பார்த்து ஆச்சரியமடைந்த போலீசார், குகைக்குள் சென்று பார்த்தனர். அங்கு, ஒரு பெண்ணும், உடன் மற்றொரு சிறுமியும் இருப்பது தெரிந்தது.
அவரிடம் விசாரித்தபோது, அவர் ரஷ்யாவை சேர்ந்த நினா குடினா, 40, என்பதும், அவர் தன் நான்கு மற்றும் ஆறு வயது மகள்களுடன் குகைக்குள் வசித்தது தெரிந்தது. குகை முழுதும் இருட்டாக இருந்தது.
இப்பகுதியில் பெரிய, பெரிய விஷப்பாம்புகள் உள்ளன. அபாயமான பகுதி என்பதால், இங்கு டிரெக்கிங் செய்வதற்கு, வனத்துறை தடை விதித்துள் ளது. இச்சூழ்நிலையில் அங்கிருப்த ரஷ்ய பெண்ணிடம் விசாரித்தபோது, ஹிந்து மதம், ஆன்மிகம் மீதான நாட்டத்தால், இங்கு வந்ததையும், மலையில் தினமும் லிங்க பூஜை செய்வதும் தெரிந்தது.
இதற்கு முன்பும், மற்றொரு இடத்தில் இது போன்ற குகையில் வசித்ததையும் ஒப்புக்கொண்டார் .
குகையில் இருந்த பெண்ணையும், மகள்களையும் போலீசார் மீட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்தனர். அவர் ரஷ்யாவுக்கு செல்ல விரும்புவதாக கூறினார். போலீசாரும் உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
நேற்றைய விசாரணையில், ரஷ்ய பெண் சொந்த நாட்டுக்கு செல்ல நீதிபதி ஷியாம் பிரசாத், அனுமதி அளித்தார். அவருக்கு தேவையான ஆவணங்களை வழங்கும்படியும், மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.