/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கே.ஜி.ஹள்ளி வழக்கின் கைதிக்கு இடைக்கால ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கே.ஜி.ஹள்ளி வழக்கின் கைதிக்கு இடைக்கால ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு
கே.ஜி.ஹள்ளி வழக்கின் கைதிக்கு இடைக்கால ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு
கே.ஜி.ஹள்ளி வழக்கின் கைதிக்கு இடைக்கால ஜாமின் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 17, 2025 07:29 AM
பெங்களூரு :கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தை தாக்கிய வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள முதியவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள, 90 இடைக்கால ஜாமின் வழங்கி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020 ஆகஸ்ட் 11ம் தேதி, பெங்களூரின், கே.ஜி.ஹள்ளி, டி.ஜே.ஹள்ளியில் மதக்கலவரம் ஏற்பட்டது. புலிகேசி நகரின், அன்றைய எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தியின் மருமகன் நவீன், பேஸ்புக்கில் இஸ்லாமிய தலைவரை பற்றி, அவதுாறாக கருத்து வெளியிட்டதால், கோபமடைந்த அந்த சமுதாயத்தினர் எம்.எல்.ஏ., சீனிவாச மூர்த்தியின் வீட்டுக்கு தீ வைத்தனர்.
கே.ஜி.ஹள்ளி போலீஸ் நிலையத்தை சூறையாடினர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், மூவர் பலியாகினர். போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த சம்பவத்தில் பயங்கரவாத அமைப்பின் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்தது. எனவே வழக்கு, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
விசாரணை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், சையத் ஆசிப், 51, முகமது ஆதிப், 31, சையத் இக்ராமுதீன், 49, உட்பட, பலரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட சையத் ஆசிப், முகமது ஆதிப், சையத் இக்ராமுதீன் ஆகியோருக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, 36,000 ரூபாய் அபராதம் விதித்து, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூலையில் தீர்ப்பளித்திருந்தது.
இதே வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள முகமது கலீம், 71, குடலிறக்க பாதிப்பால் அவதிப்படுகிறார். அறுவை சிகிச்சை செய்து கொள்ள இடைக்கால ஜாமின் அளிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவரது வயது மற்றும் நோயை கருத்தில் கொண்டு, அறுவை சிகிச்சை செய்து கொள்ள, 90 இடைக்கால ஜாமின் வழங்கி, கர்நாடக உயர் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டுள்ளது.