sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

அரசு மருத்துவமனைகளில் மக்கள் மருந்தகம் மூடும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

/

அரசு மருத்துவமனைகளில் மக்கள் மருந்தகம் மூடும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

அரசு மருத்துவமனைகளில் மக்கள் மருந்தகம் மூடும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

அரசு மருத்துவமனைகளில் மக்கள் மருந்தகம் மூடும் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை


ADDED : ஜூலை 08, 2025 11:57 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பிரதமரின் மக்கள் மருந்தகத்தை மூடும்படி, மாநில அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஏழை மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு, 50 முதல் 90 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகங்களை திறந்தது. இம்மருந்தகங்கள், கர்நாடக அரசு மருத்துவமனை வளாகத்திலும் செயல்பட்டு வருகின்றன.

இந்த மருந்தகங்களை மூடுமாறு கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து பீதர் மாவட்டம், பால்கியை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆனந்தார்ச்சார்யா ஜோஷி உட்பட 18 மக்கள் மருந்தகங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கு நீதிபதி அருண் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:

மக்கள் மருந்தகத்தை மூடும்படி உத்தரவிட்ட அரசு, இது தொடர்பாக எங்களிடம் ஆலோசனையோ அல்லது முன்னெச்சரிக்கையோ கொடுக்கவில்லை.

இந்த மருந்தகம் நடத்துவதற்காக, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மரச்சாமான்கள், ஊழியர்கள் சம்பளம் என முதலீடு செய்துள்ளனர்.

இதற்காக முறையாக உரிமமும் வாங்கி உள்ளனர். இருப்பினும், அரசின் தடை உத்தரவு, மனுதாரர்களின் வாழ்வாதார உரிமையும், அரசியலமைப்பின் பிரிவு 21ன் கீழ், வாழும் உரிமையையும் மீறுவதாகும்.

நோயாளிகள், வெளிப்புற மருந்து கடைகளில் மருந்துகள் வாங்க பரிந்துரைக்க, அரசு டாக்டர்களுக்கு அனுமதி இல்லை. இச்சூழ்நிலையில், மருத்துவமனை வளாகத்திற்குள் மக்கள் மருந்தகம் திறப்பது, அரசின் கொள்கைக்கு முரணானது என அரசு கூறியுள்ளது.

குறைந்த விலையில் 'ஜெனரிக்' மருந்துகள் வழங்குவதை நோக்கமாக கொண்ட 'ஜனதா பஜார்', 'ஜனசஞ்சீவினி ஸ்டோர்ஸ்' போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கும்போது, மக்கள் மருந்தகத்துக்கு மட்டும் தடை விதித்திருப்பது, மருந்தக உரிமையாளர்களின் உரிமையை பாதிக்கிறது.

இம்மருந்தகங்களில் 50 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கின்றன. இதனால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், மூத்த குடிமக்கள், தினசரி கூலி தொழிலாளர்கள் உட்பட நோயாளிகள் பயனடைகின்றனர். இந்த மருந்தகத்தை மூடுவது, பொது மக்களின் சுகாதார உரிமையை பாதிக்கிறது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

நீதிபதி அருண், ''அடுத்த உத்தரவு வரும் வகையில், அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் மக்கள் மருந்தகங்களை மூட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,'' என உத்தரவிட்டு, ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us