மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 11:30 PM
பெங்களூரு: பெங்களூரு சன் மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் செல்வராஜ் என்பவர், சுரங்க ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், 2021 ஏப்ரல் 10ல் சிக்கநாயகனஹள்ளி போலீசில், ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.சி., பாருக் மீது புகார் அளித்திருந்தார்.
விசாரணையில், ‘பாருக் குற்றமற்றவர்’ என, துமகூரு மாவட்டம், சிக்கநாயகனஹள்ளி தலைமை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதை எதிர்த்து, அதே நீதிமன்றத்தில் செல்வராஜ் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்ற நீதிமன்றம், பாருக் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பாருக் மனு தாக்கல் செய்திருந்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ‘‘துமகூரு மாவட்டம் தலைமை உரிமையியல் நீதிபதி மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
‘‘எம்.எல்.ஏ., – எம்.பி.,க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர் மக்கள் பிரதிநிதியாவதற்கு முன், அவர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க வேண்டும்,’’ என்றார்.
