தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிருங்கேரி தொகுதி தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவு

 சிருங்கேரி தொகுதி தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவு

 சிருங்கேரி தொகுதி தபால் ஓட்டுகளை மீண்டும் எண்ண உயர் நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஏப் 26, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: சிருங்கேரி சட்டசபை தொகுதியில், 2023ல் பதிவான தபால் ஓட்டுகளை மறுபடியும் எண்ணும்படி, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2023 சட்டசபை தேர்தலில், சிக்கமகளூரு மாவட்டத்தின் சிருங்கேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ராஜுகவுடா, பா.ஜ., சார்பில், ஜீவராஜ் போட்டியிட்டனர். இதில், 201 ஓட்டுகள் வித்தியாசத்தில் ராஜேகவுடா வெற்றி பெற்றார்.

'தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது. தகுதியான ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன' என, பா.ஜ.,வின் ஜீவராஜ் குற்றம் சாட்டினார். தபால் ஓட்டுக்களை மறுபடியும் எண்ண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றமும், 'தபால் ஓட்டுக்களை மறுபடியும் எண்ண வேண்டும்' என, தேர்தல் ஆணையத்துக்கு, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இதன்படி மே, 2ம் தேதி, ஓட்டு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகிறது. சிக்கமகளூரின் ஐ.டி.எஸ்.ஜி., கல்லுாரியில், காலை, 9:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்குகிறது.

இதனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜேகவுடா பீதியில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us