தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்.,- - எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

 காங்.,- - எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்

 காங்.,- - எம்.எல்.ஏ., ஹாரிஸ் மகன் மீதான வழக்கை ரத்து செய்த ஐகோர்ட்


ADDED : மார் 05, 2026 06:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மத்திய அரசை கண்டித்து, கடந்த 2022 ஜூலை 27 ம் தேதி பெங்களூரு ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தின் மூன்றாவது பிளாட்பாரத்தில், தண்டவாளத்தில் அமர்ந்து காங்கிரஸ் பிரமுகர் நலபாட் ஹாரிஸ் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதனால், 39 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர், ஒயிட்பீல்டு ரயில்வே போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், நலபாட் ஹாரிசுக்கு எதிராக பிடி வாரன்ட் பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நலபாட் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் மனுதாரரும் மற்றவர்களும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இதனால் 39 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேவேளையில் ரயில்வே பொருட்களுக்கோ, பயணியருக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

'மனுதாரருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவருக்கு எதிராக வழங்கப்பட்ட பிடிவாரன்டையும், வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, 'நலபாட் ஹாரிஸ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us