/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ நிலைய விவகாரம் தலையிட ஐகோர்ட் மறுப்பு
/
மெட்ரோ நிலைய விவகாரம் தலையிட ஐகோர்ட் மறுப்பு
ADDED : செப் 02, 2025 06:10 AM

பெங்களூரு: பெங்களூரு கே.ஆர்., புரத்தில் இருந்து கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வழித்தடத்தில் உள்ள சிக்கஜாலாவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் முடிவை மெட்ரோ நிர்வாகம் மாற்றியதற்கு எதிராக தொடரப்பட்ட பொதுநல மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சிக்கஜாலாவை சேர்ந்த நவீன்குமார் உட்பட பலர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
மனுவில், 'பெங்களூரு கே.ஆர்., புரத்தில் இருந்து கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையம் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வழித்தடத்தில், 2023 - 24ல் சிக்கஜாலாவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பது என்று மெட்ரோ நிர்வாகத்தினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், இந்த முடிவை கைவிட்டதுடன், காரணத்தையும் கூறவில்லை.
எனவே, சிக்கஜாலாவில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க, மெட்ரோ நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தனர். இம்மனுக்கள், தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
மெட்ரோ ரயில் வழித்தடம், வரைபடம், எங்கெங்கு ரயில் நிலையங்கள் வர வேண்டும், எத்தனை நிலையங்கள் வரவேண்டும் என்பதை தீர்மானிப்பது மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தான்.
இதை மாற்றும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு இல்லை. மெட்ரோ நிர்வாகத்தினரே முடிவு செய்ய வேண்டும். எனவே, நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.
இவ்வாறு கூறி, மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.