/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நடிகை ராதிகா குமாரசாமியிடம் ரூ.2 கோடி கடன் வாங்கிய ஜமீர்
/
நடிகை ராதிகா குமாரசாமியிடம் ரூ.2 கோடி கடன் வாங்கிய ஜமீர்
நடிகை ராதிகா குமாரசாமியிடம் ரூ.2 கோடி கடன் வாங்கிய ஜமீர்
நடிகை ராதிகா குமாரசாமியிடம் ரூ.2 கோடி கடன் வாங்கிய ஜமீர்
ADDED : செப் 02, 2025 05:57 AM

பெங்களூரு : கடந்த 13 ஆண்டு களுக்கு முன், பொருளாதார நெருக்கடியில் இருந்த, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், நடிகை ராதிகா குமாரசாமியிடம், 2 கோடி ரூபாய் கடன் வாங்கியது, லோக் ஆயுக்தா விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2019ல், 'ஐ மானிட்டரி அட்வைசரி' நிறுவனத்தின் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு வெளிச்சத்துக்கு வந்தது. அதிக லாபம் ஆசை காட்டி, ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வசூலித்து மோசடி செய்திருந்தது.
இதுதொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த நிறுவனத்துடன் அன்றைய காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசில், அமைச்சராக இருந்த ஜமீர் அகமது கானுக்கு தொடர்பிருந்ததாக கூறப்பட்டது.
எனவே அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது. ஆவணங்களை ஆய்வு செய்ததில், இவர் வருமானத்துக்கும் அதிகமான சொத்துகள் வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்தது. அமலாக்கத்துறை அறிக்கை அடிப்படையில், அன்றைய ஊழல் ஒழிப்புப் படை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தது.
சொத்து குவிப்பு இதற்கிடையில், கர்நாடகாவில் கூட்டணி அரசு கவிழ்ந்து, பா.ஜ., அரசு அமைந்தது. ஐகோர்ட் உத்தரவுப்படி, பா.ஜ., அரசு ஊழல் ஒழிப்புப் படையை ரத்து செய்து, லோக் ஆயுக்தாவுக்கு பழைய அதிகாரத்தை அளித்தது.
ஊழல் ஒழிப்புப் படையில் இருந்த அனைத்து வழக்குகளும், லோக் ஆயுக்தாவுக்கு மாற்றப்பட்டன. இவற்றில் அமைச்சர் ஜமீர் அகமது கான் மீதான, சட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கும் ஒன்றாகும். இது தொடர்பாக, அவர் உட்பட பலரிடம் லோக் ஆயுக்தா அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
யார், யாரிடம் கடன் பெற்றுள்ளார் என்பது குறித்து, ஜமீர் அகமது கான் எழுத்துப்பூர்வமாக பட்டியல் அளித்துள்ளார். இதில் நடிகை ராதிகா குமாரசாமியிடம், 2 கோடி ரூபாய் கடன் பெற்றதை குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, நடிகை ராதிகா குமாரசாமிக்கு, லோக் ஆயுக்தா அதிகாரிகள் நோட்டீஸ் அளித்து, விபரத்தை கேட்டனர்.
அவரும் சமீபத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி, கஷ்டமான நேரத்தில் ஜமீருக்கு உதவும் நோக்கில், கடன் கொடுத்ததை ஒப்புக்கொண்டார். '௨ கோடி ரூபாய் எப்படி வந்தது' என்ற கேள்விக்கு, '2012ல் நான் எனக்கு சொந்தமான ஷமிகா எண்டர்பிரைசஸ் பட தயாரிப்பு கம்பெனி மூலம், நடிகர் யஷ், நடிகை ரம்யா நடிப்பில் படம் தயாரித்தேன்.
'பொழுதுபோக்கு தொலைக்காட்சி சேனல்களுக்கு, படத்தை ஒளிபரப்பும் உரிமையை விற்றதாலும், படம் வெற்றிகரமாக ஓடியதாலும் எனக்கு நல்ல லாபம் கிடைத்தது.
அதில் 2 கோடி ரூபாயை, அமைச்சருக்கு கொடுத்தேன்' என விவரித்துள்ளார்.
அவரது விளக்கத்தை பதிவு செய்து கொண்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள், அமைச்சருக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, மேலும் சில ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டுள்ளனர். ராதிகாவும் சில நாட்களில் ஆவணங்களை வழங்குவதாக கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
கடன் பட்டியல் ரா திகா குமாரசாமி மட்டுமின்றி, ஜமீர் அகமது கானுக்கு கடன் கொடுத்தோர் பட்டியலில், முன்னாள் எம்.பி.,யும் ம.ஜ.த., தலைவருமான குபேந்திர ரெட்டியின் பெயரும் உள்ளது. இந்த பணத்துக்கு கணக்கு காட்டும்படி, இவருக்கும் லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் இதுவரை இவர் பதில் அளிக்கவில்லை.