தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தற்கொலைக்கு துாண்டிய பிரிவில் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் கண்டனம்

 தற்கொலைக்கு துாண்டிய பிரிவில் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் கண்டனம்

 தற்கொலைக்கு துாண்டிய பிரிவில் வழக்கு இன்ஸ்பெக்டருக்கு ஐகோர்ட் கண்டனம்


ADDED : மே 30, 2026 02:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 02:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'கணவரின் துன்புறுத்தலால் தற்கொலைக்கு முயன்ற மனைவி உயிர் பிழைத்த போதும், தற்கொலைக்கு துாண்டியதாக அவரது கணவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பானஸ்வாடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்' என்று, கர்நாடக உயர் நீதிமன்றம்உத்தரவிட்டது.

பெங்களூரு ஆர்.எஸ்., பாளையாவை சேர்ந்தவர் நிக்சன். இவருக்கும், இவரது மனைவிக்கும் 2025 அக்., 20ம் தேதி ஏதோ விஷயத்துக்காக தகராறு ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த மனைவி தற்கொலை செய்து கொள்வதற்காக, தான் தங்கியிருக்கும் வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்தார்.

இதனால், அவரின் கை, முதுகுதண்டு முறிந்தது. தொடர் சிகிச்சை காரணமாக, முழுமையாக குணமடைந்து உள்ளார். மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக, அவரது கணவர் நிக்சன் மீது, பானஸ்வாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்தார்.

தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிக்சன் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி கூறியதாவது:

மனுதாரரின் மனைவி தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டார். தற்போது உயிருடன் உள்ளபோது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 108 ன் கீழ், நிக்சன் மீது தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த இன்ஸ்பெக்டரின் செயல் முட்டாள்தனமானது.

அலட்சியத்தாலோ அல்லது சட்ட நடவடிக்கை எடுப்பதில் உள்ள அவசரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதன் விளைவால், மனுதாரர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டு உள்ளார்.

இது, விசாரணையின் திறமையின்மையையும், ஒரு தனி நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான அலட்சியத்தையும் பிரதிபலிக்கிறது. எனவே, மனுதாரர் சிறையில் இருந்து விடுக்கப்பட வேண்டும். இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியில் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, மூன்று மாதங்களுக்குள் நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும்.

மனுதாரரும், அவரது மனைவியும் சேர்ந்து வாழ்வதாகவும், மத்தியஸ்தம் மூலம் பிரச்னையை தீர்த்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். எனவே, மனுதாரருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us