தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மாலை நேர நீதிமன்றம் கருத்து கேட்கும் ஐகோர்ட்

மாலை நேர நீதிமன்றம் கருத்து கேட்கும் ஐகோர்ட்

மாலை நேர நீதிமன்றம் கருத்து கேட்கும் ஐகோர்ட்


ADDED : ஜூலை 30, 2025 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2025 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : கர்நாடகாவில் அனைத்து மாவட்டங்களிலும் மாலை நேர நீதிமன்ற துவக்குவது தொடர்பான கருத்துகளை மூன்று மாதங்களுக்குள் தெரிவிக்க, வக்கீல்கள் சங்கம், அனைத்து மாவட்ட முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிபதிகளுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் கடிதம் அனுப்பி உள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் பரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தின் துணை செயலர், மார்ச் 4ம் தேதி அனுப்பிய கடிதத்தில், சி.எஸ்.எஸ்., எனும் மத்திய நிதியுதவி திட்டத்தில்' மாநிலத்தில் மாலை நேர நீதிமன்றம் துவங்குவது தொடர்பான கருத்துகளை தெரிவிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில் கர்நாடக உயர் நீதிமன்றமும், பெங்களூரு நகர மாவட்ட முதன்மை சிட்டி சிவில் மற்றும் அமர்வு நீதிபதி, பெங்களூரு கிராமப்புற மாவட்ட முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி உட்பட மாநிலத்தின் 30 முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளுக்கு, ஜூலை 17ல் கடிதம் அனுப்பியுள்ளது.

மாநிலத்தில் மாலை நேர நீதிமன்றங்கள் துவங்குவது குறித்து, அந்தந்த மாவட்டங்களின் வக்கீல்கள் சங்கங்களின் கருத்துகளை சேகரித்து, மூன்று மாதங்களுக்குள் ஒருங்கிணைந்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us