/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.200 என்ற உத்தரவுக்கு... தடை! கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி
/
சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.200 என்ற உத்தரவுக்கு... தடை! கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி
சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.200 என்ற உத்தரவுக்கு... தடை! கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி
சினிமா டிக்கெட் கட்டணம் ரூ.200 என்ற உத்தரவுக்கு... தடை! கர்நாடக அரசுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி
ADDED : செப் 23, 2025 11:43 PM

கர்நாடக சினிமா ஒழுங்குமுறை (திருத்தம்) விதிகள் - 2025ஐ, மாநில அரசு இயற்றியது. இதற்கு பல்வேறு மல்டி பிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அதேவேளையில், கன்னட திரைப்பட துறையினர் வரவேற்றனர்.
எதிராக மனு அரசின் உத்தரவுக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:
கர்நாடக சினிமா ஒழுங்குமுறை (திருத்தம்) விதிகள் - 2025ஐ, மாநில அரசு இயற்றியது. இதன் மூலம், மாநிலத்தில் உள்ள மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக, 200 ரூபாய்க்கு மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த விதிகளை செயல்படுத்துவது தொடர்பாக, மனுதாரர்கள் ஆட்சேபனைகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த ஆட்சேபனைகளை கருத்தில் கொள்ளாமல், கடந்த 12ம் தேதி மாநில அரசு மல்டி பிளக்ஸ் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு, 200 ரூபாய் கட்டணத்தை நிர்ணயித்தது. அரசின் இந்த நடவடிக்கை அரசியலமைப்பு பிரிவு 14 (சமத்துவ உரிமை) மற்றும் 19 (1) (ஜி) தொழில் செய்யும் உரிமை ஆகியவற்றை மீறுவதாகும்.
அதிகாரம் இல்லை அரசின் நடவடிக்கை, கர்நாடக சினிமா கட்டுப்பாட்டு சட்டத்துக்கு எதிரானது. இச்சட்டத்தின்படி, விலைகளை நிர்ணயிக்க முடியாது. இருப்பினும், டிக்கெட் விற்பனையில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்.
தற்போது, மல்டி பிளக்ஸ்களுக்கான வாடகை, மின்சார செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதனால் லாப வரம்பு குறைந்து உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், திரைப்படம் திரையிடுவதில் இருந்து சுமார் 225 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படுகிறது. அதில், 50 சதவீதம் அதாவது, 112.5 கோடி ரூபாய், மாநில கருவூலத்துக்கு செல்கிறது.
டிக்கெட் விலைகளை திடீரென நிர்ணயித்தால், மாநிலத்துக்கான இழப்புகள் அதிகமாகும். திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு, படிப்படியாக மூடப்படும். இது, இத்துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பாதிக்கும்.
மேலும், இத்தொழிலை நம்பி, மாநிலத்தில் அதிகளவில் மூலதனம் செய்யப்பட்டு உள்ளது. இப்போது திடீரென விலை நிர்ணயம் செய்தால், அது பெரும் இழப்புக்கு வழிவகுக்கும். திரையரங்குகள் மூடும் நிலை ஏற்படும். இந்த முடிவு எடுப்பதற்கு முன், மாநில அரசு, திரையரங்குகளின் உரிமையாளர்கள், வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. எனவே, ஒரு தலைபட்சமாக எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளனர்.
இம்மனு மீது, நீதிபதி ரவி ஹொசமணி முன் விசாரணை நடந்து வந்தது.
முன்னர் நடந்த விசாரணையின் போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் வாதிடுகையில், 'ஜி.எஸ்.டி., வரியை விடுத்து, டிக்கெட் கட்டணம், 200 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது பாரபட்சமற்ற முடிவு. ஒரு சினிமாவை தயாரிக்க, முயற்சிகள், மூலதனம் தேவைப்படுகிறது. தரவுகள் சேகரிக்காமல், அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து உள்ளது. அரசின் டிக்கெட் விலை உச்சவரம்பு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்' என்றார்.
அரசு தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'மாநில அரசின் பட்ஜெட்டிலேயே சினிமா டிக்கெட் விலை உச்சவரம்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. வரைவு அறிவிப்புக்கான ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது' என்றார்.
இருக்கைகள் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ரவி ஹொசமணி, நேற்று பிறப்பித்த உத்தரவு:
திரையரங்குகள் அமைப்பதற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. இவ்வளவு இருக்கைகளுக்கு மட்டுமே தேவையான வசதிகளுடன் திரையரங்குகள் கட்டப்பட்டு உள்ளன.
இங்கு டிக்கெட்டுகள், 200 ரூபாய் அல்லது அதற்கு கீழ் விற்க வேண்டும் என்று அரசால் கூற முடியாது. கர்நாடக சினிமா கட்டுப்பாடு திருத்த விதிகள் - 2025ன் கீழ் விலைகளை நிர்ணயிப்பது சட்டவிரோதம். எனவே, அரசின் உத்தரவுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.