/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின்னொளியில் ஜொலிக்கும் மைசூரு சாலைகள்
/
மின்னொளியில் ஜொலிக்கும் மைசூரு சாலைகள்
ADDED : செப் 23, 2025 11:43 PM

மைசூரு : மை சூரு நகரில் பிரமிக்க வைத்த செஸ்காம் மின் அலங்காரங்கள் சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
தசராவை முன்னிட்டு, முதல்வரின் அறிவுறுத்தலின்படி, செஸ்காம் எனும் சாமுண்டீஸ்வரி மின் விநியோக நிறுவனம் சார்பில் 21 நாட்களுக்கு மைசூரு முழுதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
மைசூரு நகரின் 136 கி.மீ., சாலை நீளம், 118 சதுக்கங்கள் மின்னொளியால் ஜொலிக்கின்றன.
நகரின் முக்கிய இடங்களில் எல் .இ.டி., பல்புகளால் மைசூரு மன்னர்கள், சர் விஸ்வேஸ்வரய்யா உட்பட பிரபலங்களின் 80 வடிவங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 21 நாட்கள் ஒளிரும் மின்சாரத்துக்காக, 300 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இம்முறை கொல்கட்டா பாணியில் விளக்குகள் பொருத்தப்பட்டு, சுற்றுலா பயணியரின் உற்சாகத்தை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சாயாஜிராவ் சாலை, இர்வின் சாலை, ஆல்பர்ட் விக்டர் சாலை, ஜே.எல்.பி., சாலை, சாமராஜா இரட்டை சாலை மற்றும் புறநகரில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் உட்பட அரண்மனையை சுற்றி உள்ள பகுதிகளும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
நகர எல்லைக்குள் உள்ள முக்கிய சதுக்கங்களான கே.ஆர்., சதுக்கம், சாமராஜா சது க்கம், ஜெயசாமராஜா சதுக்கம், ராமசாமி சதுக்கம், தொட்டகெரே மைதானம், ரயில் நிலையம் அருகில் உள்ள கன்ஹவுஸ், எல். ஐ.சி., சதுக்கம் உட்பட பல இடங்களில் கலைப் படைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.