/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அதிகரிக்கும் போலி மருத்துவமனைகள் மாநில அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
/
அதிகரிக்கும் போலி மருத்துவமனைகள் மாநில அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
அதிகரிக்கும் போலி மருத்துவமனைகள் மாநில அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
அதிகரிக்கும் போலி மருத்துவமனைகள் மாநில அரசு மீது ஐகோர்ட் அதிருப்தி
ADDED : ஏப் 17, 2025 06:49 AM
பெங்களூரு : எஸ்.எஸ்.எல்.சி., மட்டுமே படித்தவர், தன் லட்சுமி கிளினிக்கை பதிவு செய்ய, சுகாதார துறைக்கு உத்தரவிட கோரியை மனுவை தள்ளுபடி செய்த கர்நாடக உயர் நீதிமன்றம், 'போலி மருத்துவர்கள் நடத்தி வரும் கிளினிக்குகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த தகவல், மாநில அரசுக்கு தெரியாதது ஆச்சரியம் அளிக்கிறது' என்று அதிருப்தி தெரிவித்தது.
மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை சேர்ந்தவர் டாக்டர் முரளிதரசாமி, 56. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எஸ்.எஸ்.எல்.சி., படித்துள்ள நான், 'கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள்' கீழ், என் லட்சுமி கிளினிக்கை பதிவு செய்ய, சுகாதார துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு, நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணை நடந்து வந்தது. இம்மனு மீதான தீர்ப்பு
அப்போது அவர் கூறியதாவது: போலி டாக்டர்கள், தங்களை டாக்டர் என காட்டிக்கொண்டு, கிராமப்புறங்களில் கிளினிக்குகளை திறக்கின்றனர். கிராம மக்களின் உயிருடன் விளையாடி வருகின்றனர். இத்தகைய புகார்கள் காளான் போன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இத்தகைய கிளினிக்குகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. உடனடியாக இத்தகைய கிளினிக்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த உத்தரவு கடிதத்தை, சுகாதார துறை செயலருக்கு அனுப்பி, தகுந்த நடவடிக்கை எடுக்க, நீதிமன்ற பதிவாளர், நோட்டீஸ் அனுப்ப வேண்டும். கிளினிக்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
மனுதாரர் தன்னை டாக்டர் என்று அழைத்து கொண்டு, லட்சுமி கிளினிக் நடத்தி வருகிறார். இதன் நிர்வகிப்பவரும் இவரே, வேறு யாரும் இவரது கிளினிக்கில் பணியாற்றவும் இல்லை. 'ஒன் மேன் கிளினிக்' நடத்தி வருகிறார்.
நீதிமன்ற விவாதத்தின் போது, மருத்துவம் படித்ததற்கான சான்றிதழ்களையும் சமர்ப்பிக்கவில்லை. மனுதாரர் எஸ்.எஸ்.எல்.சி., தான் படித்துள்ளார் என்று அவரது தரப்பு வக்கீலும் ஒப்புக் கொண்டுள்ளார். அவரை டாக்டர் என்று அழைக்கூடிய ஆயுர்வேதம், அலோபதி அல்லது யுனானி படித்ததற்கான சான்றிதழும் அவரிடம் இல்லை.
ஆனால், 2002 ல் ஜனவரியில், 'இந்தியன் கவுன்சில் ஆப் ஆல்டர்நேடிவ் மெடிசின்' படித்ததற்கான சான்றிதழ் மட்டுமே வைத்து உள்ளார். இதில் எதற்காக அந்த தகுதி பெற்றார் என்ற தகவலும் அதில் இல்லை. எனவே இந்த சான்றிதழை ஏற்க முடியாது.
எஸ்.எஸ்.எல்.சி., மட்டுமே படித்த இவர், டாக்டர் என்று அழைத்து கொள்ள முடியாது; டாக்டருக்கான பயிற்சியும் எடுக்க முடியாது. எனவே, அவரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.