sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 இன்று முதல் மீண்டும் ஐகோர்ட் இணையதளம்

/

 இன்று முதல் மீண்டும் ஐகோர்ட் இணையதளம்

 இன்று முதல் மீண்டும் ஐகோர்ட் இணையதளம்

 இன்று முதல் மீண்டும் ஐகோர்ட் இணையதளம்


ADDED : மார் 09, 2026 06:16 AM

Google News

ADDED : மார் 09, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறால், கடந்த 7, 8 ம் தேதிகளில் செயலிழந்தது. இன்று காலை மீண்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் இணையதளம் கடந்த 7, 8 ம் தேதிகளில் செயலிழந்தது. இது குறித்து கர்நாடக உயர் நீதிமன்ற கணினி பிரிவு பதிவாளர் தினேஷ் கூறியதாவது:

'எஸ்.எஸ்.எல்., எனும் செக்யூர் சாக்கெட்ஸ் லேயர்' சான்றிதழ் காலாவதியாகிவிட்டது. அதை புதுப்பிக்க வேண்டிய நிறுவனத்தின் தலைமையகம், டில்லி மற்றும் கொல்கத்தாவில் உள்ளது. அத்துடன் ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், மீண்டும் செயல்பாடுகளை துவங்க முடியவில்லை.

இருப்பினும், வக்கீல்கள், வாடிக்கையாளர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க, தற்காலிகமாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

இ - கோர்ட் செயலி, அதிகாரபூர்வ பொது டெலிகிராம் சேனல், காணொளி உதவி மையங்கள் ஆகியவற்றில், தினசரி வழக்கு பட்டியல், வழக்கு நிலையை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிகாரபூர்வ வலைத்தளம், மார்ச் 9 (இன்று) காலை வழக்கம் போல் செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us