ADDED : மே 27, 2026 06:36 AM

பெங்களூரு: தாய்லாந்து நாட்டிலிருந்து பெங்களூருக்கு, கூரியரில் அனுப்பப்பட்ட, 2.32 கோடி ரூபாய் மதிப்பிலான, உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெங்களூரு கெம்பே கவுடா நகரில் உள்ள சர்வ தேச தபால் நிலையத்திற்கு, தாய்லாந்து நாட்டில் இருந்து, கடந்த 21ம் தேதி, கூரியரில் ஒரு அட்டை பெட்டி பார்சல் வந்தது.
பெறுநர் முகவரியை கூரியர் ஊழியர் சரி பார்த்த போது முரணாக இருந்ததால், சி.சி.பி., போலீசாருக்கு, தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து அட்டை பெட்டியை பிரித்து பார்த்த போது, அதற்குள், தின்பண்டங்கள் இருந்தன.
அதை திறந்து பார்த்த போது, அந்த தின் பண்ட பார்சலுக்குள் ஹைட்ரோ கஞ்சா இருந்தது. அதன் எடை, 3 கிலோ 312 கிராம் இருந்தது.
சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு 2.32 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதை அனுப்பியவர்கள் யார் என, விசாரிக்கின்றனர்.
