தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கர்நாடகாவில் எச்.ஐ.வி., பாதிப்பு அதிகரிப்பு 26 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் அதிகம்

 கர்நாடகாவில் எச்.ஐ.வி., பாதிப்பு அதிகரிப்பு 26 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் அதிகம்

 கர்நாடகாவில் எச்.ஐ.வி., பாதிப்பு அதிகரிப்பு 26 முதல் 35 வயதுக்கு உட்பட்டோர் அதிகம்


ADDED : ஜூன் 08, 2026 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 11:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் எச்.ஐ.வி., பாதிப்பு அதிகரித்து உள்ளது. 26 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கு பாதிப்பு அதிகமாக உள்ளது.

கர்நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்கம் வெளியிட்டுள்ள தரவு:

கர்நாடகாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2023 - 2024ல் 44,581 ஆகவும்; 2024 - 2025ல் 62,664 ஆகவும் இருந்த நிலையில், 2025 - 2026ல் 66,606 ஆக அதிகரித்துள்ளது.

18 முதல் 25 வயது; 26 - 35 வயதினரிடையே பரவல் அதிகமாக உள்ளது.

18 முதல் 25 வயதுக்கு உட்பட்டோருக்கான பாதிப்பு 2024 - 2025ல் 6,962 ஆக இருந்தது. ஆனால் 2025 - 2026ல் 6,283 ஆக குறைந்துள்ளது.

அதே நேரம் 26 முதல் 35 வயதுக்கு உட்பட்டோருக்கான பாதிப்பு 2023 - 2024ல் 9,351 ஆக இருந்தது, 2025 - 2026ல் 14,555 ஆக பதிவாகிள்ளது. இந்த ஆண்டு மட்டும் 417 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி., பாதிப்பு அதிகரிப்பு குறித்து தொற்றுநோய் நிபுணர் சுவாதி ராஜகோபால் கூறுகையில், ''பாலியல் உறவுகளுக்காக டேட்டிங் செயலியை பயன்படுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. பாலியல் துணைவர்களை எளிதில் அணுக முடிவதால், பாதுகாப்பாற்ற உடல் தொடர்பும் அதிகரித்துள்ளது. இது எச்.ஐ.வி., பரவலை தீவிரப்படுத்துகிறது,'' என்றார்.

சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஓரின சேர்க்கையின் போது பாதுகாப்பான உடலுறவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

கல்லுாரி விடுதிகளில் தான் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சில ஆண்கள், பெண் பாலியல் தொழிலாளர்களுடன் பாதுகாப்பற்ற உறவு கொண்டு, பின், மற்ற ஆண்களுடன் தொடர்பில் இருப்பதால் தொற்று வேகமாக பரவுகிறது. கல்லுாரி விடுதிகளில் அரசு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துகிறது.

எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்படுபவர்கள் ஆதரவுக்காக 1097 என்ற உதவி எண் செயல்பாட்டில் உள்ளது. எச்.ஐ.வி., குறித்த விழிப்புணர்வு, ஆபத்து மதிப்பீடு, பரிசோதனை செய்யவும் 'பிரேக்பீரி' செயலியை பயன்படுத்தலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us