/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
செருப்படி வாங்கிய எச்.எம்., 'சஸ்பெண்ட்'
/
செருப்படி வாங்கிய எச்.எம்., 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 02, 2025 05:33 AM
பாகல்கோட்: பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்த ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். விசாரணைக்கு பின், செருப்படி வாங்கிய தலைமை ஆசிரியரும் நேற்று 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பாகல்கோட்டின் இளகல்லில் அரசு சார்ந்த உருது தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் அந்தானய்யா, 45. இவர் இதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் அமீனா, 35, என்பவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பல முறை எச்சரித்தும் பொருட்படுத்தவில்லை.
ஒருநாள் இது போன்று, தொந்தரவு கொடுத்ததால், பொங்கி எழுந்த ஆசிரியை அமீனா, தலைமை ஆசிரியர் அந்தானய்யாவை செருப்பால் அடித்தார்.
இதுகுறித்து, இளகல் போலீஸ் நிலையத்தில், அந்தானய்யா புகார் செய்தார். போலீசாரும் ஆசிரியை அமீனாவை அழைத்து விசாரணை நடத்தினர். அவரும் நடந்ததை விவரித்தார்.
தலைமை ஆசிரியரை, செருப்பால் அடித்ததால் ஆசிரியை அமீனாவை, கடந்த மாதம் கல்வித்துறை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்து, துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டனர். தலைமை ஆசிரியர் அந்தானய்யா தவறு செய்திருப்பது தெரிய வந்ததால், அவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, கல்வித்துறை நேற்று உத்தரவிட்டது.