sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

'கிரஹ ஆரோக்கியா' திட்டம் விஸ்தரிப்பு தொற்றாத நோய்களுக்கு பரிசோதனை

/

'கிரஹ ஆரோக்கியா' திட்டம் விஸ்தரிப்பு தொற்றாத நோய்களுக்கு பரிசோதனை

'கிரஹ ஆரோக்கியா' திட்டம் விஸ்தரிப்பு தொற்றாத நோய்களுக்கு பரிசோதனை

'கிரஹ ஆரோக்கியா' திட்டம் விஸ்தரிப்பு தொற்றாத நோய்களுக்கு பரிசோதனை


ADDED : ஜூன் 03, 2025 01:56 AM

Google News

ADDED : ஜூன் 03, 2025 01:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''கிரஹ ஆரோக்கியா திட்டத்தின் கீழ், வீடு தேடி சிகிச்சை அளிக்கும் திட்டம், மாநிலம் முழுதும் விரிவுபடுத்தப்படுகிறது. இதில், 14 தொற்று ஏற்படாத நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படும்,'' என, மாநில சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

பெங்களூரு விகாஸ் சவுதாவில் நேற்று கிரஹ ஆரோக்கியா திட்டம் தொடர்பான பயிற்சி வகுப்பை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் துவக்கி வைத்தார்.

மாற்றம்


பின், அவர் பேசியதாவது:

கோலாரில் கிரஹ ஆரோக்கியா திட்டம் துவங்கியபோது, பல நோய்கள் வெளிச்சத்துக்கு வர துவங்கின. அனைத்தையும் ஆய்வு செய்து, இத்திட்டத்திலும் சில மாற்றங்களை கொண்டு வந்து உள்ளோம்.

ஆஷா சுகாதார ஊழியர்களுக்கும், சமுதாய சுகாதார அதிகாரிகளுக்கும் சில பொறுப்புகளை வழங்கி உள்ளோம். இவர்கள், நோயாளிகளை கண்காணிப்பர்.

தொற்று ஏற்படாத நோய்கள், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. தனியார் மருத்துவமனைகளில் இந்நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் அதிக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பது முக்கியமாகும்.

எனவே தான் மாநிலம் முழுதும் இந்த பரிசோதனை விரிவுபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இப்பரிசோதனை செய்யப்படும்.

விழிப்புணர்வு


நீரிழிவு, ரத்த அழுத்தம், வாய், மார்பகம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் உள்ளிட்ட 14 வகையான நோய்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும். ஆஷா சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவர்.

ஆயுஷ்மான் சுகாதார மையங்களில் உள்ள சமூக சுகாதார அதிகாரிகள், பரிசோதனைக்கு உதவுவர். ஒவ்வொரு மாவட்டத்திலும், சுகாதார பணியாளர்களுக்கு வீட்டு சுகாதார பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

என்னென்ன நோய்கள்?

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை, கர்ப்பவாய் புற்றுநோய், நீரிழிவு கால் மற்றும் ரெட்டினோபதி, மனநல கோளாறுகள், நரம்பியல் கோளாறுகள், துாக்கத்தில் மூச்சுத்திணறல், நாள்பட்ட சிறுநீரக நோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், ரத்த சோகை, கால் நீரிழிவு நோய்களுக்கு, ஆயுஷ்மான் சுகாதார மையஙகளில் இலவச பரிசோதனை, மருந்துகள் வழங்கப்படும்.








      Dinamalar
      Follow us