தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மெட்ரோ ரயில் பயணியரை கண்காணிக்க ஊர்க்காவல் படை

 மெட்ரோ ரயில் பயணியரை கண்காணிக்க ஊர்க்காவல் படை

 மெட்ரோ ரயில் பயணியரை கண்காணிக்க ஊர்க்காவல் படை


ADDED : பிப் 01, 2026 05:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணியரை கண்காணிக்க, ஊர்க்காவல் படையினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணியருக்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதாவது, 'ஹெட்போன் இல்லாமல் மொபைல் போன் உபயோகிக்கக்கூடாது, புகையிலை, குட்கா பொருட்கள் பயன்படுத்தக் கூடாது, உணவு சாப்பிடக்கூடாது, சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதற்காக வீடியோ எடுக்கக் கூடாது' என்பது உட்பட பல கட்டுப்பாடுகள் உள்ளன.

இந்த கட்டுப்பாடுகளை பயணியர் சிலர், மதிக்காமல் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அவ்வப்போது அபராதம் விதிக்கப்படுகிறது. இருப்பினும், விதிமீறல்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

அதனால், மெட்ரோ அதிகாரிகள் ஊர்க்காவல் படையினருடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதாவது, பயணியரிடம் விதிமுறைகள் குறித்து ஊர்க்காவல் படையினர் எடுத்துரைக்கின்றனர். மேலும், பயணியர்விதிமுறைகளை மீறுகின்றாரா எனவும் கண்காணிப்பர் என, மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us