/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கில் முதல்வருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
/
தர்மஸ்தலா வழக்கில் முதல்வருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
தர்மஸ்தலா வழக்கில் முதல்வருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
தர்மஸ்தலா வழக்கில் முதல்வருடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை
ADDED : ஜூலை 19, 2025 10:57 PM

பெங்களூரு: “தர்மஸ்தலா வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் பேசி உள்ளேன்,” என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளுக்கு மட்டும் தலா 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருப்பதை, எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
பா.ஜ., ஆட்சியில் இருந்தபோது அக்கட்சி எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாயும், எதிர்க்கட்சியினருக்கு 25 கோடி ரூபாயும் கொடுத்தனர்.
ஒரு சிலருக்கு 20 கோடி ரூபாய் தான் கிடைத்தது. நிதி ஒதுக்கும் விஷயத்தில் அவர்கள் என்ன செய்தார்களோ, அதையே நாங்களும் செய்கிறோம். இதை பழிவாங்கும் அரசியல் என்று சொல்ல முடியாது.
தர்மஸ்தலாவில் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, மஞ்சுநாதா கோவிலில் முன்னாள் ஊழியர் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணை நடக்கிறது. தேவைப்பட்டால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும் தயார். வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, முதல்வர் சித்தராமையாவிடம் பேசி உள்ளேன்.
ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜுக்கு போலீசார் சம்மன் கொடுத்துள்ளனர். விசாரணைக்கு பின் தான் வழக்கில் எம்.எல்.ஏ.,வுக்கு தொடர்பு உள்ளதா என்பது தெரியும்.
நாங்கள் என்ன செய்தாலும் அரசியல் செய்வதாக பா.ஜ.,வினர் விமர்சிக்கின்றனர். இதற்கு எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.
இரண்டு ஆண்டு கால ஆட்சியில் முதல்வர் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதுபற்றி மக்களுக்கு தெரியப்படுத்த சாதனை மாநாடுகள் நடத்தப்படுகின்றன. இதில் என்ன தவறு உள்ளது?
இவ்வாறு அவர் கூறினார்.