உலகிலேயே பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பு கர்நாடகாவில் உள்ளது உள்துறை அமைச்சர் பெருமிதம்
உலகிலேயே பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பு கர்நாடகாவில் உள்ளது உள்துறை அமைச்சர் பெருமிதம்
ADDED : மார் 08, 2026 05:41 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில், உலகிலேயே மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பு உள்ளது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்று, சி.ஐ.டி., மற்றும் சைபர் குற்ற விசாரணை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்திருந்த மூன்றாம் ஆண்டு சைபர் குற்ற விசாரணை உச்சி மாநாட்டை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துவக்கி வைத்தார். பின், அவர் பேசியதாவது:
உலகளாவிய பிராண்ட் கர்நாடகா வெறும் மாநிலம் மட்டுமல்ல. அது, ஒரு உலகளாவிய பிராண்ட். உலகம்,பெங்களூரை பார்க்கும் போது, அது புதுமையின் எதிர்காலத்தை காணும். எங்களிடம் சிறந்த மற்றும் மிகவும் பாதுகாப்பான டிஜிட்டல் அமைப்பு உள்ளது.
சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த, கர்நாடக அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் தாக்குதல்களை விசாரிக்கவும், டிஜிட்டல் ஆதாரங்களை சேகரிக்கவும் தேவையான திறன்கள், பயிற்சி, தொழில்நுட்பத்துடன் கூடிய சைபர் குற்றப்பிரிவுகளை அமைத்து உள்ளது.
கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் முக்கிய நகரங்களிலும் மொத்தம், 43 'சி.இ.என்., எனும் சைபர், பொருளாதாரம், போதை பொருள்' தடுப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. நம் குடிமக்களுக்கு சைபர் பாதுகாப்பை வழங்க நம் அரசு உறுதி பூண்டுள்ளது.
உகந்த சூழல் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு, கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு இணக்கம் மற்றும் இடர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற பல நிறுவனங்களுடன், சைபர் பாதுகாப்பு ஸ்மார்ட் ஆப்களின் சுற்றுச்சூழல் அமைப்புக்கு, நம் அரசு உகந்த சூழலை உருவாக்கி உள்ளது.
குடிமக்களுக்கு அதிக டிஜிட்டல் பாதுகாப்பு வழங்க, தனியார் துறை மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்வது நல்ல முயற்சி. அனுபவ மும், நிபுணத்துவமும் இணைவதால், வேகமாக மாறி வரும் சைபர் அச்சுறுத்தலை தடுக்க முடியும்.
'டார்க் வெப்' செயல்பாடுகள், கிரிப்டோ கரன்சி கண்காணிப்பு, நிதி மோசடி தடுப்பு, டிஜிட்டல் தடயவியல் ஆய்வகங்களை பலப்படுத்துதல் மிகவும் பொருத்தமானவை.
மாநிலத்தில் சி.சி.ஐ.டி.ஆர்., எனும் சைபர் குற்றப் புலனாய்வு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டு உள்ளது. இது நம் போலீஸ் அதிகாரிகளை மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களுக்கு பங்களிப்பதுடன், சைபர் குற்ற விசாரணையை பலப்படுத்த உதவும்.
இம்மையத்தில் இருந்து வெளிவரும் ஆராய்ச்சிகள் சைபர் போலீசாருக்கு உதவுகின்றன. இம்மையம் மூலம், மாநிலத்தில் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசி னார்.
