ADDED : நவ 07, 2025 10:59 PM

அல்வா என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருநெல்வேலி தான். அதன் பின், அல்வாவில் பல வகைகள் வந்துள்ளன. அந்த வரிசையில், இந்த வாரம் பலாப்பழ அல்வா. கேரள மாநிலத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படும் இனிப்பு வகை.
செய்முறை பலா சுளையில் உள்ள கொட்டைகளை நீக்கிக் கொள்ளவும். அவற்றை சிறிய சிறிய துண்டுகளாக்கி வேகவைக்கவும். கொஞ்சம் சூடு ஆறியதும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சிக் கொள்ளவும். பின்னர் வேக வைத்த பலாப்பழ சுளைகளுடன் வெல்லப் பாகு சேர்க்கவும்.
ஒரு கடாயில் நெய் ஊற்றி சிறிது சூடானதும் பலாப்பழ வெல்லக் கலவையை ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, பச்சரிசி மாவு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாகாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்.
நன்கு கெட்டியாகும் பதத்திற்கு வரும்போது முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து துாவவும். இறுதியாக சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து கிளறிவிட்டால் போதும், ஆரோக்கியம் நிறைந்த பலாப்பழ அல்வா சாப்பிடலாம்.
- நமது நிருபர் -

