/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
13 வயது சிறுமி பலாத்காரம் வீட்டு உரிமையாளர் கைது
/
13 வயது சிறுமி பலாத்காரம் வீட்டு உரிமையாளர் கைது
13 வயது சிறுமி பலாத்காரம் வீட்டு உரிமையாளர் கைது
13 வயது சிறுமி பலாத்காரம் வீட்டு உரிமையாளர் கைது
ADDED : நவ 16, 2025 10:56 PM
தேவனஹள்ளி: தனது வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தம்பதியின் 13 வயது மகளை, பலாத்காரம் செய்த வீட்டு உரிமையாளரும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே விஜயபுராவில் வசிப்பவர் சந்திரசேகர், 40. இவருக்கு சொந்தமான இரண்டு வீடுகளையும் வாடகைக்கு விட்டு உள்ளார். இதில் ஒரு வீட்டில் தம்பதியும், இவர்களின் 13 மகளும் வசிக்கின்றனர்.
இன்னொரு வீட்டில் மஞ்சுளா, 35 என்பவர், தனது கணவருடன் வசிக்கிறார்.
தம்பதி கூலி வேலைக்கு செல்கின்றனர். இவர்களின் மகளுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். இதனால் வேலைக்கு செல்லும் போது, தம்பதி தங்கள் மகளை, மஞ்சுளா வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக அடிக்கடி சிறுமியை மிரட்டி, சந்திரசேகர் பலாத்காரம் செய்து உள்ளார். இதற்கு மஞ்சுளாவும் உடந்தையாக இருந்து உள்ளார்.
இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் துடித்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது சிறுமி பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது தெரிந்தது.
பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சந்திரசேகர், மஞ்சுளா மீது விஜயபுரா போலீசில் புகார் செய்தனர். 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.

