/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேல்சபையிலும் எதிரொலித்த 'ஹனிடிராப்'
/
மேல்சபையிலும் எதிரொலித்த 'ஹனிடிராப்'
ADDED : மார் 22, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு; கர்நாடக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய ஹனிடிராப் விவகாரம், மேல்சபையிலும் எதிரொலித்தது. இந்த விஷயத்தை சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டுமென, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.
மேல்சபையிலும் கூட, இந்த விஷயம் எதிரொலித்தது. ஹனிடிராப் வழக்கை சி.பி.ஐ.,க்கு ஒப்படைக்கும்படி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். சபை தலைவரின் இருக்கைக்கு முன் சென்று, சபை தீர்மானங்கள் அடங்கிய காகிதங்களை கிழித்து வீசினர்.
இதனால் சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, கூட்டத்தை நடத்த முடியாமல் சிறிது நேரம் தள்ளிவைத்தார்.