ஹூப்பள்ளி - திருவனந்தபுரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்
ஹூப்பள்ளி - திருவனந்தபுரம் இன்று சிறப்பு ரயில் இயக்கம்
ADDED : செப் 12, 2026 04:35 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: ஹூப்பள்ளி - திருவனந்தபுரம் இடையில் இன்று சிறப்பு ரயில் இயங்குகிறது.
தென்மேற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வி நாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் ஹூப்பள்ளி - திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் வரை இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இன்று காலை 8:30 மணிக்கு ஹூப்பள்ளியில் புறப்படும் ரயில், நாளை காலை 10:00 மணிக்கு, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் வடக்கில் இருந்து 14ம் தேதி மதியம் 2:00 மணிக்கு புறப்படும் ரயில், 15ம் தேதி மதியம் 3:45 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
