/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ் 110 ரன் வித்தியாசத்தில் மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ்
/
மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ் 110 ரன் வித்தியாசத்தில் மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ்
மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ் 110 ரன் வித்தியாசத்தில் மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ்
மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ் 110 ரன் வித்தியாசத்தில் மங்களூரு டிராகன்சை வீழ்த்திய ஹூப்பள்ளி டைகர்ஸ்
ADDED : ஆக 27, 2025 08:10 AM

பெங்களூரு : மஹாராஜா டிராபி டி20 கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியது. நேற்று நடந்த போட்டியில், மங்களூரு டிராகன்ஸ் அணியை, 110 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஹூப்பள்ளி டைகர்ஸ் இறுதி போட்டிக்குள் நுழைந்தது.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், மஹாராஜா டிராபி கிரிக்கெட் போட்டி, மைசூரு மஹாராஜா மைதானத்தில் ஆக., 11 முதல் நடந்து வருகிறது. இப்போட்டி இறுதி கட்டத்தை நோக்கிச் செல்கிறது.
இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதி போட்டி நேற்று நடந்தது. 'டாஸ்' வென்ற ஹூப்பள்ளி டைகர்ஸ் அணி, பேட்டிங் தேர்வு செய்தது.
கேப்டன் விளாசல் ஹூப்பள்ளி டைகர்சின் அணியில் கேப்டன் படிக்கல், டாஹா களம் இறங்கினர். ஆரம்பத்தில் இருந்தே கேப்டன் படிக்கல் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட, டாஹாவும் பந்துகளை விளாசினார். அணின் ஸ்கோர் மளமளவென ஏறியது. 81 ரன்கள் இருக்கும்போது, ரோனித் மோர் பந்தில், டாஹா 'எல்பி.டபிள்யூ'வானார். இவர், 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரை தொடர்ந்த அபினவ் மனோகர் களம் இறங்கினார். அவரும் பந்துகளை விளாசினார். அணியின் ஸ்கோர் 186 இருக்கும் போது கிராந்தி குமார் பந்தில் அவுட்டானார். இவர், 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.
ஹூப்பள்ளி டைகர்ஸ் அணி, 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 210 ரன்கள் எடுத்திருந்தது. அணியின் கேப்டன் படிக்கல், 64 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து, ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதுபோன்று, மன்வந்த் குமார், 6 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்து களம் இறங்கிய மங்களூரு டிராகன்ஸ் அணி சார்பில் லோச்சன் கவுடா, சரத் களம் இறங்கினர். 6 ரன்கள் எடுத்தபோது, கரியப்பா பந்தில் சரத், ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்ததாக வந்த திப்பா ரெட்டியும், லோச்சன் கவுடாவும் நிதானமாக ரன்கள் எடுத்தனர்.
வெற்றி அணியின் ஸ்கோர், 21 ரன்கள் இருந்தபோது, ரிதேஷ் பட்கல் பந்தில் லோச்சன் கவுடா அவுட்டானார். இவர், 10 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தார். அவருக்கு பின், அனிஷ் களம் இறங்கினார். இவர், 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். திப்பா ரெட்டி 18 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, ரிதேஷ் பட்கல் பந்தில் அவுட்டானார்.
அவரை தொடர்ந்து வந்த வீரர்கள், நிலைத்து நிற்கவில்லை. இதனால், 16.1 ஓவர்களில் 100 ரன்களுக்கு 10 விக்கெட்களை இழந்தது. இதன் மூலம், 110 ரன்கள் வித்தியாசத்தில் ஹூப்பள்ளி டைகர்ஸ் வெற்றி பெற்றது.
ஹூப்பள்ளி டைகர்ஸ் அணி சார்பில் ரிதேஷ் பட்கல் 3 ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து, மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

