தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ நோய் எதிர்ப்பு சக்திக்கு குதிரைவாலி சூப்!

 நோய் எதிர்ப்பு சக்திக்கு குதிரைவாலி சூப்!

 நோய் எதிர்ப்பு சக்திக்கு குதிரைவாலி சூப்!


ADDED : ஜூன் 26, 2026 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

கட்டுகோப்பான உடல்வாகுவுடன் மனிதர்கள் இருந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால் சாதாரண காய்ச்சலுக்கே சுருண்டு விடுவர். உடலில் எப்போதும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க, குதிரைவாலி சூப் செய்து குடிக்கலாம். அதை தயார் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l குதிரைவாலி அரிசி - கால் கப்

l பாசி பருப்பு - ஒரு டீஸ்பூன்

l பொடிசாக நறுக்கிய - ஆறு சின்ன வெங்காயம்

l பூண்டு - ஐந்து பல்

l தக்காளி - 1

l மிளகு - ஒரு டீஸ்பூன்

l சீரகம் - ஒரு டீஸ்பூன்

l பெருங்காய துாள் - ஒரு சிட்டிகை

l முடக்கத்தான் கீரை அல்லது துாதுவளை அல்லது முருங்கை கீரை தேவையான அளவு

l நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

l உப்பு, தண்ணீர், கொத்துமல்லி தழை தேவையான அளவு

செய்முறை

அடுப்பை ஆன் செய்து குக்கர் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு தாளிக்கவும். பின், பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும். இதனுடன் தக்காளி, முடக்கத்தான் கீரை அல்லது துாதுவளை அல்லது முருங்கை கீரை சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். வதக்கிய கலவையுடன் மஞ்சள், பெருங்காய துாள்கள், உப்பு சேர்க்கவும்.

இப்போது ஊற வைத்துள்ள குதிரைவாலி அரிசி, 4 டம்ளர் தண்ணீர் ஊற்ற வேண்டும். அது சூப் பதத்திற்கு இருக்க வேண்டும். பின், குக்கரை மூடி, 5 விசில் விடவும். சூடு ஆறியதுடன் குக்கரை திறந்து கரண்டியால் அல்லது மத்தால் நன்கு கடைந்து விடவும். இறுதியாக, மிளகு துாள், கொத்துமல்லி தழை துாவி இறக்கினால் சூடான, சுவையான குதிரைவாலி சூப் தயார்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us