/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பூங்காவில் மீண்டும் கலை நிகழ்ச்சி தோட்டக்கலை அதிகாரிகள் தகவல்
/
பூங்காவில் மீண்டும் கலை நிகழ்ச்சி தோட்டக்கலை அதிகாரிகள் தகவல்
பூங்காவில் மீண்டும் கலை நிகழ்ச்சி தோட்டக்கலை அதிகாரிகள் தகவல்
பூங்காவில் மீண்டும் கலை நிகழ்ச்சி தோட்டக்கலை அதிகாரிகள் தகவல்
ADDED : ஜூலை 24, 2025 11:14 PM
பெங்களூரு: நடைப்பயிற்சியாளர்கள், சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் நோக்கில், கப்பன்பூங்காவில் 'உதய ராகா' மற்றும் 'சந்தியா ராகா' என்ற இசை நிகழ்ச்சிகளை மீண்டும் துவக்க, தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இயக்குநர் ஜெகதீஷ் கூறியதாவது:
பெங்களூரின் கப்பன் பூங்காவில், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன், 'உதய ராகா' மற்றும் 'சந்தியா ராகா' என்ற பெயரில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
பூங்காவின் பேண்ட் ஸ்டேன்டில் நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்றரை மணி நேரத்துக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நடைப்பயிற்சியாளர்கள். பொதுமக்கள், சுற்றுலா பயணியர் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து, மகிழ்வோடு சென்றனர். கொரோனா பரவுவதற்கு முன், திடீரென நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.
கப்பன் பூங்கா, லால்பாக் பூங்காவில் மீண்டும் 'உதய ராகா' மற்றும் 'சந்தியா ராகா' நிகழ்ச்சிகளை நடத்த ஒத்துழைப்பு கோரி கன்னடம், கலாசாரத்துறையிடம், தோட்டக்கலைத்துறை அனுமதி கோரியது.
இதற்கு கன்னடம், கலாசாரத்துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் சில வாரங்களில், கப்பன் பூங்காவில் 'உதய ராகா' மற்றும் 'சந்தியா ராகா' நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.
இதனால் கலைஞர்களுக்கும் உதவியாக இருக்கும். நடைபயிற்சியாளர்கள், சுற்றுலா பயணியரும் மகிழ்வர். இசை, நடனம், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.