தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் நீக்கம்

 நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் நீக்கம்

 நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்கள் நீக்கம்


ADDED : பிப் 13, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளிடம், பலவந்தமாக பணம் வசூலித்த ஒப்பந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூரு தாலுகாவில் உள்ள ஆஷாலா அடவிபாவி கிராமத்தை சேர்ந்தவர் கெத்தம்மா, 52; சிறு நீரக பிரச்னையால் ஜனவரி, 31ம் தேதி சிகிச்சைக்காக ஹூப்பள்ளியில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிப்ரவரி, 7ம் தேதி, அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும், நேற்று முன் தினம் காலை அவர் உயிரிழந்தார்.

அவரது உடலை வாகனத்தில் ஏற்ற, மருத்துவமனை டி குரூப் ஊழியர், 500 ரூபாய் கேட்டார். தங்களிடம் பணம் இல்லையென உறவினர்கள் கூறியும், விடாமல் தொந்தரவு கொடுத்து போன் பே மூலமாக, 200 ரூபாய் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஊடகத்தினர் மூலமாக அம்பலமானது.

இதையடுத்து, மருத்துவ கல்வித்துறை தலைமை செயலர், கிம்ஸ் மருத்துவமனை இயக்குனருக்கு போன் செய்து அறிக்கை கேட்டார். அதன்பின் இயக்குனரும், விசாரணை குழு அமைத்தார். விசாரணையில் ஒப்பந்த ஊழியர்கள் மூவர், நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றது உறுதியானது. ஊழியர்களும் தவறை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து, மருத்துவ கல்வித்துறைக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், மூன்று பேரையும் பணி நீக்கம் செய்து, கிம்ஸ் நிர்வாகம் நேற்று உத்தரவிட்டது.

இதுகுறித்து, கிம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ஈஸ்வர் ஹொசமனி கூறியதாவது:

மருத்துவமனை பணிக்கு, ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை வினியோகிக்கும் ஏஜன்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். இத்தகைய ஊழியர்களை நியமிக்கக்கூடாது என, எச்சரித்துள்ளோம். நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் பணம் வசூலிப்பதை, எந்த காரணத்தை கொண்டும் எங்களால் சகிக்க முடியாது. இனி இது போன்று நடக்காமல் கவனமாக இருப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us