தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பில் தொகை கேட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை

 பில் தொகை கேட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை

 பில் தொகை கேட்ட ஹோட்டல் உரிமையாளர் குத்தி கொலை


ADDED : ஏப் 01, 2026 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 04:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொட்டபல்லாபூர்: சாப்பிட்ட உணவுக்கு கட்டணம் கேட்ட ஹோட்டல் உரிமையாளரை, இரும்பு கம்பியால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொட்டபல்லாபூர் நகர் தர்கா ஜோகிஹள்ளி அருகில் ஹோட்டல் நடத்தி வந்தவர் சையது அப்ரூஸ். நேற்று முன்தினம் இரவு சிலர் உணவு சாப்பிட வந்தனர். உணவு சாப்பிட்ட பின், ஊழியர்கள் பில் கட்டணம் கேட்டனர்.

இதனால் கோபமடைந்த நபர்கள், ஊழியர்களை திட்டினர். தட்டி கேட்க வந்த உரிமையாளரையும் தாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

மீண்டும் நேற்று காலை ஹோட்டலுக்கு வந்த நான்கைந்து பேர், சையது அப்ரூசை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர்.

படுகாயமடைந்த அவரை, அங்கிருந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி சையது அப்ரூஸ் உயிரிழந்தார்.

தொட்டபல்லாபூர் ரூரல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அங்கு வந்த அவர்கள், கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். முதல்கட்ட விசாரணையில், உரிமையாளரை கொன்றது நந்து, அபி உட்பட பலர் என்பது தெரியவந்துள்ளது.

வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us