ADDED : ஆக 13, 2026 11:25 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: விகாஸ் சவுதாவில் அசுத்தமாக செயல்பட்ட ஹோட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.
கர்நாடக அரசின் தலைமை செயலக வளாகமான, பெங்களூரு விகாஸ் சவுதாவில் எம்.எல்.ஏ.,க்கள் தங்கும் விடுதி வளாகத்திலுள்ள ஹோட்டலில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது, கெட்டுப்போன இட்லி, அசுத்தமாக இருந்த சமையல் செய்யும் இடத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்தனர்.
தட்டின் மீது உயிருள்ள கரப்பான் பூச்சிகள் இருப்பது, காய்கறிகள் மீது பூஞ்சை இருப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் விகாஸ் சவுதாவில் உள்ள ஹோட்டலுக்கு அதிரடியாக 'சீல்' வைக்கப்பட்டது.
