/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபி, டீ விலையை உயர்த்த ஹோட்டல்கள் சங்கம் முடிவு
/
காபி, டீ விலையை உயர்த்த ஹோட்டல்கள் சங்கம் முடிவு
காபி, டீ விலையை உயர்த்த ஹோட்டல்கள் சங்கம் முடிவு
காபி, டீ விலையை உயர்த்த ஹோட்டல்கள் சங்கம் முடிவு
ADDED : மார் 08, 2026 05:10 AM
பெங்களூரு: சமையல் எரிவாயு விலை அதிகரித்து உள்ளதால், பெங்களூரு ஹோட்டல்களில், காபி, டீ மற்றும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் ஏற்கனவே மாநில அரசு பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், சந்தையில் மளிகை பொருட்கள், காய்கறிகளின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதற்கிடையில் தொடர்ந்து மூன்றாவது மாதமாக, வர்த்தக சமையல் காஸ் சிலிண்டர் விலை மார்ச் 1ம் தேதியில் இருந்து, 115 ரூபாய் உயர்ந்துள்ளது. இது, ஹோட்டல் உரிமையாளர்களை மேலும் நெருக்கடியில் தள்ளி உள்ளது. அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட, ஹோட்டல் உரிமையாளர்கள், விலைகளை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி உள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், 'ஏற்கனவே பல கட்டண உயர்வுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். இதில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக, சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தியிருப்பது, 'வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது' போன்றுள்ளது. காபி, டீ மற்றும் உணவு பொருட்கள் விலையை ஐந்து முதல் 10 ரூபாய் வரை உயர்த்தினால், ஒரு சாதாரண நபரின் மாதாந்திர வருமானத்தில், 'துண்டு' விழும்' என்றனர்.
அதேவேளையில், ஹோட்டல் உணவை நம்பியிருக்கும் விடுதிகளில் தங்கி வேலைக்கு செல்வோர், கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், நடுத்தர குடும்பத்தினருக்கு நிதி சுமையாக இருக்கும். காஸ் விலை உயர்வால், ஹோட்டல் உரிமையாளர்கள் தொழில் நஷ்டம் அடையும் என அஞ்சுகின்றனர். மறுபுறம், பொதுமக்களும் அரசின் முடிவுக்கு எதிராக தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து கொண்டே போனால், சாமானிய மக்கள் எப்படி வாழ்வார்கள்? என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

