/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபி விலையை உயர்த்த தயாராகும் ஹோட்டல்கள்
/
காபி விலையை உயர்த்த தயாராகும் ஹோட்டல்கள்
ADDED : பிப் 15, 2025 02:48 AM
பெங்களூரு: காபி துாளின் விலை அதிகரிக்கப்பட உள்ளதால், ஹோட்டல்களில் காபி விலையை உயர்த்த உரிமையாளர்கள் தயாராகின்றனர்.
கர்நாடகாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. பால் விலை, அரசு பஸ்களின் பயண கட்டணம் உயர்த்தப்பட்டது. குடிநீர் கட்டணத்தை உயர்த்த, குடிநீர் வாரியம் தயாராகிறது. மக்கள் பொருளாதார சுமையில் சிக்கி தவிக்கின்றனர்.
இதற்கிடையே காபி துாள் தயாரிப்பு நிறுவனங்கள், காபி துாள் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. பிப்ரவரி இறுதியில் கிலோ காபி துாளுக்கு 100 ரூபாய் அதிகரிக்கப்படும். இம்மாதம் இறுதியில் புதிய விலை, அமலுக்கு வர வாய்ப்புள்ளது.
காபி துாள் விலை உயர்வால், ஹோட்டல்கள், கபேக்களில் காபி விலையை உயர்த்த உரிமையாளர்கள் தயாராகின்றனர். ஒரு கப் காபி விலை ஐந்து ரூபாய் அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மின் கட்டணம்
மின் கட்டணத்தை உயர்த்த, பெஸ்காம் தயாரவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில், மின் கட்டணத்தை உயர்த்தும்படி, மின் ஒழுங்கு முறை ஆணையத்தில், வேண்டுகோள் விடுத்துள்ளது.
இம்மாதம் 17ம் தேதி, பொது மக்களிடம் கருத்து கேட்டறிய உள்ளது. இவர்களின் கருத்து கேட்டறிந்த பின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, கட்டண உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.