/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் வீடுகள் இடிப்பால் 'இண்டி' கூட்டணியில் விரிசல்; அடுத்த மாநில பிரச்னையில் மூக்கை நுழைக்கும் தலைவர்கள்
/
பெங்களூரில் வீடுகள் இடிப்பால் 'இண்டி' கூட்டணியில் விரிசல்; அடுத்த மாநில பிரச்னையில் மூக்கை நுழைக்கும் தலைவர்கள்
பெங்களூரில் வீடுகள் இடிப்பால் 'இண்டி' கூட்டணியில் விரிசல்; அடுத்த மாநில பிரச்னையில் மூக்கை நுழைக்கும் தலைவர்கள்
பெங்களூரில் வீடுகள் இடிப்பால் 'இண்டி' கூட்டணியில் விரிசல்; அடுத்த மாநில பிரச்னையில் மூக்கை நுழைக்கும் தலைவர்கள்
ADDED : டிச 31, 2025 07:27 AM
- நமது நிருபர் -
பா .ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., உட்பட 36 கட்சிகள் இணைந்து உருவாக்கியது தான், 'இண்டி' கூட்டணி. இந்தக் கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் ஒவ்வொருவரும், தாங்களே பெரியவர்கள் என்ற மனப்பான்மை உடையவர்கள். அவர்களிடம் இணக்கமே கிடையாது. பெயரளவுக்கு கூட்டணி என்று இருந்தாலும், தேர்தல் நேரத்தில், 'சீட்' ஒதுக்கீட்டில் ஏற்படும் பிரச்னையால் தனித்து தான் போட்டியிடுகின்றனர் .
ஓட்டு வங்கி தற்போது இண்டி கூட்டணியில் உள்ள கர்நாடகாவின் காங்கிரஸ், கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுகள் இடையே விரிசல் ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு நடக்கிறது.
இவர்களின் ஓட்டு வங்கியாக ஒரு சமூகம் உள்ளது. இந்நிலையில், பெங்களூரின் கோகிலு லே - அவுட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட, ஒரு சமூகத்தினர் உட்பட பலர் வசித்த, 167 வீடுகள் இடிக்கப்பட்டன.
தங்களுக்கு ஆதரவாக இருக்கும் சமூகத்தினர் வீடுகளை இழந்ததால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பொங்கி எழுந்தார். 'கூட்டணியில் இருக்கிறோம் என்று
கூட பார்க்காமல், புல்டோசர் ஆட்சி நடப்பதாக, கர்நாடக அரசை விமர்சித்தார்.
இதற்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்களும் தக்க பதிலடி கொடுத்தனர். 'எங்கள் மாநில விஷயத்தில் மூக்கை நுழைக்க நீங்கள் யார்' என்றும், விஜயனை தாக்கினர்.
தொடர் வெற்றி உண்மையை சொல்லப் போனால், குடியிருப்பு பகுதியில் இருக்கும் நீர்நிலையை காப்பாற்றவும், திடக்கழிவு மேலாண்மைக்காகவும் வீடுகள் இடிக்கப்பட்டன. இதில், கேரளா தலையிட வேண்டிய அவசியமே இல்லை. கேரளாவில் அடுத்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது இரண்டாவது முறையாக ஆட்சியில் இருக்கும், இடது ஜனநாயக முன்னணி, மூன்றாவது முறையாக வெற்றி பெற நினைக்கிறது. இதற்காகவே வீடுகளை இழந்தவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து, அந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் ஓட்டுகளை வாங்கி விடலாம் என, கணக்குப் போகிறது.
கேரளாவில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற, முனைப்பில் இருக்கும் காங்கிரஸ் மேலிடமும், குறிப்பிட்ட அந்த சமூகத்தினரின் ஓட்டுகளை பெற, கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு, மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலர் வேணுகோபால் கேரளாவை சேர்ந்தவர். பிரியங்கா வயநாடு எம்.பி.,யாக உள்ளார். இவர்கள் கொடுத்த நெருக்கடியால், வீடுகளை இழந்தோருக்கு மாற்று வசதி செய்து கொடுக்க, அரசு முன்வந்து உள்ளது.
எதிர்ப்பு ஏன்? இவ்விஷயத்தில் சும்மா இருந்த எதிர்க்கட்சிகள், தங்களுக்கு ஓட்டு கிடைக்காமல் போய் விடுமோ என பயந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சில மாதங்களுக்கு முன் பீஹார் தேர்தல் நடக்கும் போது, பெங்களூரில் வசிக்கும் பீஹார் தொழிலாளர்களை சந்தித்த, துணை முதல்வர் சிவகுமார், 'நீங்கள் தங்குவதற்கு பவன் கட்டி தரப்படும்' என்று ஆசை வார்த்தை கூறினார். அப்போதே எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளுங்கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஒரு மாநில விஷயத்தில், இன்னொரு மாநிலம் தலையிடுவது சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. ஆளாளுக்கு ஏதாவது பேசி, மக்களிடையே பிரச்னையை துாண்டிவிட ஆரம்பித்து உள்ளனர்.
அரசியல்வாதிகளின் பேச்சுக்கு இரையாகாமல் இருப்பது எப்படி என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.

