/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்கிரஸ் மேலிடத்திற்கு அமைச்சர் பரமேஸ்வர் கெடு
/
காங்கிரஸ் மேலிடத்திற்கு அமைச்சர் பரமேஸ்வர் கெடு
ADDED : டிச 31, 2025 07:28 AM

பெங்களூரு: ''சட்டசபையில் பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதற்கு முன், தற்போதைய முதல்வர் சித்தராமையா மாற்றப்படுவாரா இல்லையா என்பதை, காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க வேண்டும்,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு சதாசிவ நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சடடசபையில் பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குள் கட்சி மேலிடம், கர்நாடகா முதல்வர் விஷயத்தில் திடமான, தெளிவான முடிவை அறிவிக்க வேண்டும்.
என் மீது அன்பு கொண்டவர்கள், என்னை முதல்வராக்க வலியுறுத்தி, டில்லியில் உள்ள கட்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்தி உள்ளனர். இதுபோன்று சொல்லக்கூடாது என்பதை அவர்களிடம் ஏன் கூற வேண்டும்.
கோகிலு கிராசில் வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக, முதல்வரும், துணை முதல்வரும் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
அதில், சாதக, பாதகங்களை ஆராய்ந்து, வீடுகளை இழந்த தகுதியானவர்களுக்கு வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளனர். எனவே, பிரச்னை இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டது. வீடுகள் இழந்தவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

