/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பசுமை கிரையான்ஸ்' தயாரிக்கும் இல்லத்தரசிகள்
/
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பசுமை கிரையான்ஸ்' தயாரிக்கும் இல்லத்தரசிகள்
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பசுமை கிரையான்ஸ்' தயாரிக்கும் இல்லத்தரசிகள்
குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 'பசுமை கிரையான்ஸ்' தயாரிக்கும் இல்லத்தரசிகள்
ADDED : டிச 29, 2025 06:38 AM

குழந்தைகளின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காத, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 'பசுமை கிரையான்ஸ்'களை தயாரித்து, இரு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
பெங்களூரை சேர்ந்தவர்கள் நேஹா, கரண். 35 வயதுக்குட்பட்ட இவர்கள் இருவரும் குடும்ப தலைவிகள். பட்டப்படிப்பை முடித்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன், பெங்களூரில் நடந்த கண்காட்சியில் இருவரும் சந்தித்து கொண்டனர். தாங்கள் வந்த நோக்கம் குறித்து அளவளாவினர். தங்கள் குழந்தைகளுக்கு 'கிரையான்ஸ்' எனும் மெழு வண்ணக்கட்டி வாங்க வந்திருப்பதாக பேசினர். குழந்தைகள் கிரையான்ஸ்களை வாயில் வைத்து விளையாடுவது, கவலை அளிப்பது குறித்தும் தங்கள் பேச்சில் கருத்துகளை பரிமாறி கொண்டனர்.
கணக்கீடு இதை தவிர்க்க, ரசாயனம் கலக்காத பசுமை கிரையான்ஸ்களை வாங்கலாமே என யோசித்தனர். ஆனால், அத்தகைய வண்ண பசுமை கிரையான்ஸ்கள் நம் நாட்டில் கிடைப்பதில்லை என்பதை அறிந்தனர். நாமே தயாரிக்கலாமே என ஆலோசித்தனர். இதற்காக என்ன செலவாகும்; எப்படி செய்வது என கணக்கிட்டனர்.
இதற்காக ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர். பசுமை கிரையான்ஸ்களுக்கு தேவையான ஆர்கானிக் தேன் மெழுகு, சோயா மெழுகு, கார்னாபா எனும் பனை மரத்தின் ஓலையில் இருந்து எடுக்கப்படும் தாவர மெழுகு, தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், வைட்டமின் 'ஈ' எண்ணெய், ஷியா எண்ணெய் உட்பட இயற்கை பொருட்களை வாங்கினர்.
ஆறு மாதங்கள் தொடர்ந்து செய்த ஆய்வில் வெற்றி பெற்றனர்.
தங்கள் நிறுவனத்துக்கு 'டாப்பிள் பிளேகார்ட் (dabbleplaykart)' என பெயர் பதிவு செய்தனர். தாங்கள் தயாரித்த வண்ணக்கட்டிகளை, சுற்றுச்சூழல் ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
அவர்களிடம் இருந்து அனுமதி கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி துள்ளிய இருவரும், 2018 மார்ச் 8ம் தேதி 'மகளிர் தினத்தில்' நிறுவனத்தை துவக்கினர்.
இணையதளம் இந்த வண்ணக்கட்டிகள், வண்ணங்கள் தீட்டுவதற்கு மட்டுமின்றி, குழந்தைகளுக்கு பிடித்தமான பொம்மைகள் வடிவில் உருவாக்கப்பட்டு உள்ளன.
இதை வைத்து குழந்தைகள் தாராளமாக விளையாடலாம். குழந்தைகளுக்கு எந்த ஆபத்தும் நேராது என்பதை விளக்கினர். பலரும் ஆதரவளித்தனர்; பாராட்டினர். இதற்காக, www.dabbleplayart.com என்ற இணையதளத்தை துவக்கினர்.
இவர்கள் தயாரிக்கும் வண்ணக்கட்டிகளை பெங்களூரில் உள்ள மான்டெஸ்சோரி, கின்டர்கார்டன் பள்ளிகள் பெருமளவில் வாங்கி வருகின்றன.
இது தவிர, கையிலேயே பெயின்டை எடுத்து, வரையும் வகையிலும் வண்ணங்களை தயாரித்து உள்ளனர். இதை குழந்தைகள் தங்கள் வாயில் வைத்தாலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
இவர்கள் தயாரிக்கு ம் ஒவ்வொரு புதிய பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பி தரம் சோதித்த பின்னரே, விற்பனை செய்கின்றனர்.
இவர்களிடம் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான வண்ண பொருட்கள் கிடைக்கின்றன.
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் நலம் கொண்ட இரு தாய்களும் தற்போது தொழில்முனைவோராக சாதித்து, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றனர்
- நமது நிருபர் - .

