/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மோடி மீது நம்பிக்கை மக்களுக்கு எத்னால் உறுதி
/
மோடி மீது நம்பிக்கை மக்களுக்கு எத்னால் உறுதி
ADDED : மே 13, 2025 12:42 AM

விஜயபுரா : ''நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது. மக்கள் அஞ்சக்கூடாது,'' என, விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை, இந்தியாவுக்கு விட்டுத்தருவது, சிந்து நதி நீரை நாமே பயன்படுத்துவது உட்பட பிரதமர் நரேந்திர மோடி விதித்த நிபந்தனைகள் வரவேற்கத்தக்கது. இதை நான் பாராட்டுகிறேன்.
ஆனால் போர் நிறுத்தம் அறிவித்தது, நாட்டு மக்களுக்கு வருத்தம் அளித்துள்ளது. இதற்கு முன்பு நேரு, இந்திரா செய்த தவறை இன்றைய பிரதமர் மோடி செய்ய கூடாது என்பது, நாட்டு மக்களின் விருப்பம்.
சிம்லா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் ரத்து செய்துள்ளது. இந்திரா செய்த தவறால் லாகூர், நம் நாட்டின் அங்கமாவது கை நழுவியது.
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மீது நம்பிக்கை உள்ளது. மக்கள் அஞ்சக்கூடாது. நம்மிடமும் அணுகுண்டு உள்ளது.
நம் பிரமோஸ் ஆயுதம் மட்டும் இருந்தால் போதும். பாகிஸ்தானை அழிக்கலாம். இத்தகைய உறுதியான முடிவை, பிரதமர் எடுக்க வேண்டும். இதில் பின் வாங்கினால் சரியாக இருக்காது.
ஹிந்துக்களை பாதுகாப்போம் என்ற நம்பிக்கையால், பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டுப் போட்டனர். எனவே கடினமான முடிவில் இருந்து பின் வாங்க வேண்டாம். இந்திய மக்கள் ஒரு முறை பாகிஸ்தான் அழிவதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.