ADDED : ஏப் 22, 2026 01:42 AM

சிக்கமகளூரு: ரப்பர் தோட்டத்தில் எரிந்த நிலையில் மனித எலும்புகள் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கமகளூரு என்.ஆர்., புரா தாலுகா, அரலிகொப்பா கிராமத்தை சேர்ந்தவர் எல்டோ. இவருக்கு அதே கிராமத்தில் சொந்தமாக ரப்பர் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நுாற்றுக்கணக்கானோர் வேலை பார்க்கின்றனர்.
நேற்று வழக்கம் போல, ரப்பர் தோட்டத்துக்கு வேலைக்கு சென்ற தொழிலாளர்கள், அங்கு எரிந்த நிலையில் மனித எலும்புகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து, என்.ஆர்., புரா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை துவங்கினர். 'தோட்டத்தில் வேலை பார்த்த கேரளத்தைச் சேர்ந்த வாலிபர் பிபின் சில நாட்களுக்கு முன் காணாமல் போனார். மேலும், எலும்புகளுக்கு அருகில் ஒரு சட்டை கண்டெடுக்கப்பட்டது. இதனால், அந்நபர் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டிருக்கலாம்' என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.பி., ஜிதேந்திர குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
