sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பழைய சாம்பாரால் கணவர் கோபம்: மனைவி தற்கொலை

/

 பழைய சாம்பாரால் கணவர் கோபம்: மனைவி தற்கொலை

 பழைய சாம்பாரால் கணவர் கோபம்: மனைவி தற்கொலை

 பழைய சாம்பாரால் கணவர் கோபம்: மனைவி தற்கொலை


ADDED : மார் 08, 2026 05:43 AM

Google News

ADDED : மார் 08, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாபஸ்பேட்: மூன்று நாட்களாக பழைய சாம்பாரை பரிமாறியதால், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், மனைவி தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், பேனச்சனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் ரங்கசாமி, 32. இவரது மனைவி காவ்யா, 27. தம்பதிக்கு நான்கு வயதில் மகள் உள்ளார்.

வீட்டில் மூன்று நாட்களாக, காவ்யா குழம்பு வைக்கவில்லை. பழைய சாம்பாரை பிரிட்ஜில் வைத்து, சுட வைத்து, சுட வைத்து கணவருக்கு பரிமாறினார். நேற்று முன் தினம் இரவும், அதே சாம்பாரை பரிமாறினார்.

இரண்டு நாட்களாக சகித்துக் கொண்டு, பழைய குழம்பை சாப்பிட்ட ரங்கசாமி, மூன்றாவது நாளும் அதே குழம்பை ஊற்றியதால், பொறுமையிழந்து மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டினார். அடிக்கவும் முற்பட்டதாக கூறப்படுகிறது. மனம் நொந்த காவ்யா, பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இதை யாரும் கவனிக்கவில்லை.

காவ்யா வாந்தி எடுத்த போது, பூச்சி கொல்லி மருந்தை குடித்திருந்தது தெரிந்தது. உடனடியாக குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியில் உயிரிழந்தார்.

தாபஸ்பேட் போலீசார், காவ்யாவின் கணவர் ரங்கசாமியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us