தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது

மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது


ADDED : ஜூன் 19, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2025 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கலபுரகி: மனைவியை கொன்று, நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலபுரகி மாவட்டம், ஆளந்தா தாலுகாவின் கல்லஹங்கரகா கிராமத்தில் வசிப்பவர் வெங்கடேஷ், 38. இவரது மனைவி ரூபா, 30. தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் பக்கத்து வீட்டில், திருமணமாகாத ராகவேந்திரா, 27, வசிக்கிறார். இவருக்கும், ரூபாவுக்கும் கள்ளக்காதல் இருந்தது.

இதையறிந்த வெங்கடேஷ், மனைவியை கண்டித்தார். இதனால், தினமும் தம்பதிக்கிடையே வாக்குவாதம் நடந்தது. இதனால் ரூபா, கணவர், குழந்தைகளை விட்டு தனி வீடு பார்த்துக் கொண்டு வசித்து வந்தார். இவரது செயலால், வெங்கடேஷ் கோபம் அடைந்தார்.

மனைவியை கொல்லவும் திட்டம் தீட்டினார். 10ம் தேதி, மனைவி சாலையில் நடந்து வருவதை பார்த்த வெங்கடேஷ், அவரை வழிமறித்து திட்டி, கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு விசாரணையை துவக்கினர்.

முதலில் வெங்கடேஷ் மீது சந்தேகம் வந்தது, ஆனால் அவர் தனக்கு எதுவுமே தெரியாது; அவரை வேறு யாரோ கொலை செய்துள்ளனர் என, அழுது கதறினார். அதன்பின் போலீசார், சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, வெங்கடேஷ் தான் கொலையாளி என்பது தெரிந்தது.

அவரை கைது செய்ய சென்றபோது, துாக்க மாத்திரைகளை விழுங்கி, தற்கொலை நாடகமாடினார். அவரை போலீசார், மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் குணமடைந்ததால், நேற்று அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us