/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளத்தொடர்பு மனைவி கொலை செய்த கணவர் கைது
/
கள்ளத்தொடர்பு மனைவி கொலை செய்த கணவர் கைது
ADDED : அக் 03, 2025 01:33 AM
ஹுன்சூர்: மனைவியின் கள்ளக்காதலால் வெறுப்படைந்து, அவரை வெட்டி கொலை செய்த கணவர், கைது செய்யப்பட்டார்.
மைசூரு மாவட்டம், ஹுன்சூர் தாலுகா அருகில் உள்ள மூகனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் விஜய், 34. இவரது மனைவி கீதா, 29. தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றிய கீதா, இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த திலீப்புடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார்.
இதையறிந்த கணவர், மனைவியை கண்டித்து திட்டினார். இதனால் கீதா, ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து, ஹெச்.டி.கோட்டேவின், ஹொம்மரகள்ளிபாளையாவில் உள்ள, தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
அங்கிருந்தபடியே கள்ளக்காதலரை சந்தித்தார். அவ்வப்போது இருவரும் ஊரை சுற்றினார். இரு குடும்பத்தின் பெரியவர்கள், ஊர் பெரியவர்கள் பல முறை தம்பதியை சேர்த்து வைக்க, சமாதான பேச்சு நடத்தினர். கீதாவுக்கு புத்திமதி கூறி, கணவரின் வீட்டுக்கு அனுப்பினர். ஆனால், கீதா திருந்தவில்லை.
செப்டம்பர் 29ம் தேதி இரவு, விஜய் வெளியே சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த திலீப், கீதாவை வெளியே அழைத்து சென்றார். இது கணவருக்கு தெரிந்தது. மனைவியிடம் கேள்வி எழுப்பினார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது. கோபத்தில் கீதா, வீட்டில் இருந்த அரிவாளால், கணவரை தாக்க முயற்சித்தார்.
அரிவாளை பறித்து கொண்ட விஜய், தன் அண்ணன் சுரேஷுடன் சேர்ந்து, மனைவியை விரட்டி சென்று, வெட்டி கொலை செய்தார். அங்கிருந்த சுரேஷையும், உருட்டுக்கட்டையால் தாக்கி, காலை உடைத்தார்.
இது குறித்து, கீதாவின் தந்தை வெங்கட ரமணா, ஹுன்சூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விஜய் மற்றும் அவரது அண்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
போலீசார் விஜயை விசாரித்த போது, 'என் மனைவி கீதா எனக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தார். நான் உறங்கியதும், கள்ளக்காதலருடன் உல்லாசமாக இருந்தார். இதனால் கோபமடைந்து, அவரை வெட்டி கொன்றேன்' என விவரித்துள்ளார்.