தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: பா.ஜ.,

 த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: பா.ஜ.,

 த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை: பா.ஜ.,


UPDATED : பிப் 09, 2026 04:04 AM

ADDED : பிப் 09, 2026 04:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 09, 2026 04:04 AM ADDED : பிப் 09, 2026 04:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்: மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சரும், பா.ஜ., தமிழக தேர்தல் இணை பொறுப்பாளருமான முரளிதர் மோகல் நேற்று திருப்பூரில் அளித்த பேட்டி:

கோவில்களின் இந்திய தலைநகராக தமிழகம் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், இங்கு இருக்கும் கோவில்களின் நிர்வாகம் அப்படி இல்லை. மத்திய பட்ஜெட்டில், தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் அரசு இருந்த போது, 2014ம் ஆண்டு வரை தமிழகத்துக்கு 94,000 கோடி ரூபாய் தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், மோடியின் ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் அமைக்க, மாநிலங்களில் இருந்து நிலம் கையகப்படுத்த வேண்டும்; அப்பணியை மாநில அரசு தான் செய்ய வேண்டும். ஆனால், தமிழக அரசு அதை விரைந்து செய்வதில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பின், அது வேகப்படுத்தப்படும்.

தமிழகத்தில் இரட்டை இன்ஜின் அரசு தான் வேண்டும். மதுக்கடை, போதை பொருள் புழக்கம், அதனால் சட்டம் - ஒழுங்கு கெட்டு போய் உள்ளது. குழந்தைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்து வருகிறது. தே.ஜ., கூட்டணி ஆட்சியில் இதெல்லாம் இருக்காது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் கடந்த மூன்று ஆண்டில், 61 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறை 50.7 சதவீதம் அதிகரித்துள்ளது. கூட்டணி தொடர்பாக, த.வெ.க.,வுடன் பா.ஜ., பேச்சு நடத்தவே இல்லை. தே.ஜ., கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கிறது. விரைவில் தீர்வு எட்டப்பட்டு அறிவிக்கப்படும். இவ்வாறு முரளிதர் மோகல் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us