/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சின்னத்திரை நடிகையை கொல்ல முயன்ற கணவர் கைது
/
சின்னத்திரை நடிகையை கொல்ல முயன்ற கணவர் கைது
ADDED : ஜூலை 11, 2025 10:59 PM

ஹனுமந்தநகர்: நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், சின்னத்திரை நடிகையை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற, கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு, ஹனுமந்தநகர் முனேஸ்வரா லே - அவுட்டில் வசிப்பவர் அமரேஷ், 49. இவரது மனைவி மஞ்சுளா என்ற ஸ்ருதி, 45.
சின்னத்திரை நடிகையான இவர், 'அம்ருததாரே' உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அமரேஷும், ஸ்ருதியும் 20 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
அமரேஷ் ஆட்டோ ஓட்டுகிறார். ஸ்ருதி திரைத்துறையில் பணியாற்றுவதால், சிலருடன் சகஜமாக பேசி உள்ளார். ஆனால் ஸ்ருதியின் நடத்தையில் அமரேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவ்விஷயத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்துள்ளது.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் ஸ்ருதியை, அமரேஷ் தாக்கி உள்ளனர். இதனால் அவர் மீது, ஹனுமந்தநகர் போலீசில் ஸ்ருதி புகார் செய்தார். இருவரையும் அழைத்து சமாதானம் பேசி, போலீசார் அனுப்பி வைத்தனர்.
ஆனாலும் ஸ்ருதியிடம் அமரேஷ் தொடர்ந்து தகராறு செய்துள்ளார். கணவரால் வெறுப்படைந்த ஸ்ருதி, இரண்டு மாதங்களாக ஸ்ரீநகரில் உள்ள தன் சகோதரர் வீட்டில் வசித்தார். கடந்த 4ம் தேதி ஸ்ருதியை சமாதானப்படுத்தி கணவர் அழைத்து வந்தார்.
அன்றைய தினம் இரவே இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த அமரேஷ், ஸ்ருதியின் கண்ணில் மிளகாய் பொடியை துாவி கத்தியால் குத்தினார். விலா எலும்பு, தொடை, கழுத்தில் குத்து விழுந்தது.
ஸ்ருதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அமரேஷ் தப்பி ஓடிவிட்டார். ஸ்ருதி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து ஸ்ருதியின் சகோதரர் கடந்த 9ம் தேதி ஹனுமந்தநகர் போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக இருந்த அமரேஷை, போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.