/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொல்ல முயற்சி சந்தேக கணவர் கைது
/
மனைவியை கொல்ல முயற்சி சந்தேக கணவர் கைது
ADDED : ஜூலை 17, 2025 10:57 PM

ஆர்.ஆர்.நகர்: உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராம் நரேஷ், 45. இவரது மனைவி காயத்ரி, 40. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். 15 ஆண்டுகளாக பெங்களூரு ஆர்.ஆர்.நகர் கிருஷ்ணப்பா பிளாக்கில் வாடகை வீட்டில் மகளுடன், தம்பதி வசிக்கின்றனர்.
தனியார் நிறுவனத்தில் காவலாளியாக ராம் நரேஷ் வேலை செய்தார். மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதால் வேலைக்கு சரியாக செல்லவில்லை.
இரண்டு மாதங்களுக்கு முன், வேலையை விட்டார். தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்தார்.
காயத்ரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை தினமும் அடித்து, உதைத்wதார்.
நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த ராம் நரேஷ், மகளை கடைக்கு அனுப்பி வைத்தார்.
சமையல் அறையில் நின்ற காயத்ரியின் கழுத்தை, சேலையால் நெரித்துக் கொல்ல முயன்றார்.
இந்த நேரத்தில் கடைக்கு சென்ற மகள் வீட்டிற்கு வந்தார்.  தாயை, தந்தை கொல்ல முயற்சிப்பதை பார்த்து கூச்சல் போட்டார். இதனால் ராம் நரேஷ் அங்கிருந்து தப்பினார்.
மயக்கமடைந்த காயத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காயத்ரி அளித்த புகாரில், ஆர்.ஆர்.நகர் போலீசார், ராம் நரேஷை கைது செய்தனர்.

